பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
138

இட

இட்ட தனி மாலை ஈது,’ என்னும். 1அது அல்லாததனை அதுவாக நினைத்து மயங்குகின்றவள் அதனையே கண்டால் விடாளே அன்றோ? ‘சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய்’ என்கிறபடியே, அவன் தலைமேல் கொண்டு அடியார்க்குக் கொடுக்குமது அன்றோ அதுதான்? என்றது. ‘ஸ்ரீசடகோபனுக்குச் சார்த்துகை’ என்றபடி. தேறியும் தேறாதும் - ‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்; நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள். அன்றிக்கே, 3‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்; இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.

    மாயோன் திறத்தனளே இத்திருவே - மாயோன் 4இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன் என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான

_____________________________________________________

1. ‘அதுவல்லாததனை அதுவாக நினைத்து’ என்றது, ‘பகவானுடைய
  சம்பந்தமுடையது அல்லாததனைப் பகவானுடைய சம்பந்தமுடையதாகக்
  கொண்டு’ என்றபடி. திருத்துழாயினைச் சர்வேசுவரன் தலைமேல் கோடற்கு
  மேற்கோள், ‘சுடர்முடிமேலும்’ என்பது. இது, திருவாய்மொழி, 1. 9 : 7.

2. அடியார்களில் வைத்துக்கொண்டு ஆழ்வார் பிரதாநராகையாலே ‘நமக்கன்றி
  நல்கான்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘என்றது’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். சர்வேசுவரனுக்கு ஆழ்வார் திருவடிகளேயன்றோ?

3. ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழி, ஞானத்தின் காரியம்;
  இத்திருவாய்மொழி, மயக்கத்தின் காரியம். 

4. ‘இடையாட்டத்திலாள்’ என்றது, ‘அவன் விஷயத்திலே ஈடுபட்டிருக்குமவள்’
  என்றபடி.