பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
148

    வி-கு : ‘சடகோபன் கண்ணனைச் சொல்வினையாற்சொன்ன பாடல் இவை பத்தும் நல்வினை என்று கற்பவர்கள், தொல்வினை தீர, வைகுந்தம் நண்ணி, எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பர்,’ என்க. வண்மை சடகோபருக்கு அடை : குருகூருக்கு ஆக்கலுமாம்.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார், சமுசாரத்துக்கம்போய், பகவானை விட்டுச் சிறிதும் பிரிதல் இல்லாத திருநாட்டிலே எல்லாரும் தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’ என்கிறார்.

    வல் வினை தீர்க்கும் கண்ணனை - அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. இதனால், 2பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,’ என்பதனைத் தெரிவித்தபடி. வண்குருகூர்ச் சடகோபன் - பெருவள்ளலான ஆழ்வார். 3இன்று நாமுங்கூட இருந்து பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணும்படி பண்ணின வள்ளன்மை அன்றோ? ஆதலால், ‘வண்சடகோபன்’ என்கிறது. சொல் வினையால் சொன்ன பாடல் - 4சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல். அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல். அன்றிக்கே, ‘சொல் தொழிலால் - அதாவது, வாசிகமான

_____________________________________________________

1. பின்னிரண்டு அடிகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. மேற்பாசுரத்தில் ‘என் செய்கேன்’ என்று கைவாங்கின பின், ‘வல்வினை
  தீர்க்கும் கண்ணனை’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘பெற்றவர்கள்’
  என்று தொடங்கி.

  ‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்
  குற்றானாய் வளர்த்துஎன் னுயிராகி நின்றானை’

  என்று பெரிய திருமொழிப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.

3. ‘உதாரகுணம் யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இன்று’
  என்று தொடங்கி.

4. ‘வினை’ என்பதற்கு, மூன்று வகையான பொருள் : அவை, பத்தி,
  பகவானுடைய குணங்கள், தொழில் என்பன. முதற்பொருளில், பத்தியை
  வினை என்கிறது, கர்மத்தினாலே சாதிக்கக் கூடியது பத்தியாகையாலே.
  இரண்டாவது பொருளில், பகவானுடைய செயல்களாலே குணங்கள் பிரகாசிக்க
  வேண்டுகையாலே, குணங்களை ‘வினை’ என்கிறது. மூன்றாவது பொருள்,
  வெளிப்படை.