அ
அடிமையால் சொன்ன பாடல்’
என்னுதல். ஆயிரத்துள் இவை பத்தும் - ஆயிரம் திருவாய்மொழியிலும், இவர் எம்பெருமானுக்கு நிறம்
முதலியவற்றால் ஒத்திருப்பவையான பொருள்களைக் கண்டு அவனாக நினைத்துப் பிச்சு ஏறின இத்திருவாய்மொழி.
நல் வினை என்று
கற்பார்கள் - இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ? ஆன
பின்னர், இது 1பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள். அன்றிக்கே, ‘இது விலக்ஷணகிருத்யம்
என்று கற்குமவர்கள்’ என்னுதல். 2நலனிடை வைகுந்தம் நண்ணி - பிரிவு என்பது
சிறிதும் இல்லாத பரமபதத்தைக் கிட்டி. தொல்வினை தீர - அநாதியாய் வருகின்ற 3அவித்தியை
முதலானவைகள் தீர்ந்து. எல்லாரும் தொழுது எழ -சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய
சூரிகளும் தொழுது ஆதரிக்க. என்றது, ‘பணியா அமரருங்கூட, 4‘பதியினில் பாங்கினில்
பாதங்கள் கழுவினர்’ என்கிறபடியே, அவர்கள் வழிபாடு செய்து ஆதரிக்கும்படி ஆவர்கள்,’ என்றபடி.
5‘தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் 6‘பரம்பொருளைப் பற்றிய
அறிவு இல்லாதவன், இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற்போலே
காணும், இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி.
வீற்றிருப்பாரே - அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி
_____________________________________________________
1. பாவனம் - உபாயம். ‘போக்யதாபுத்தி இல்லையேயாகிலும்,
பாவனம்
என்றாகிலும் கற்க வல்லவர்கள்’ என்றபடி. விலக்ஷண கிருத்யம் - போக்கியம்.
அதாவது,
இனிய பொருள்.
2. நலனிடை - நன்மையிடத்திலேயான.
‘நன்மை யாது?’ என்ன, ‘பிரிவென்பது
சிறிதும் இல்லாத நன்மை’ என்கிறார், ‘பிரிவு’ என்று தொடங்கி.
3. அவித்தியை - ஞானத்திற்கு
விரோதமாய் இருப்பது.
4. திருவாய்மொழி,
10. 9 : 10.
5. ‘தொழுது எழு’ என்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘தொழுது எழு’ என்று
தொடங்கி.
6. தைத்திரீய. ஆந. 6.
|