பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
150

இருக்கப்பெறுவர்கள். 1‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது, ‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.                                        

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

மண்ணுலகில் முன்கலந்து மால்பிரிகை யால்மாறன்
பெண்ணிலைமை யாய்க்காதல் பித்தேறி - எண்ணிடில்முன்
போலிமுத லான பொருளைஅவ னாநினைந்து
மேல்விழுந்தான் மையல்தனின் வீறு.

(34)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. வேதவாக்கியம்.