ஐந
ஐந்தாந்திருவாய்மொழி
- ‘வீற்றிருந்து’
முன்னுரை
1மேல்
திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
2மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி. அப்படி
விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில். 3‘பேற்றுக்கு
இதற்கு அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை. 4‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப்
பின் இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
_____________________________________________________
1. மேல் திருவாய்மொழியிலே
உண்டான அளவிற்கு மீறிய அப்ரீதியையும்,
இத்திருவாய் மொழியிலே உண்டாகும் அளவிற்கு மீறிய
ப்ரீதியையும்
அநுசந்தித்து வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று
தொடங்குவது.
‘மேலே உண்டான வருத்தம் சிறிதும் தோன்றாதே எப்போதும்
பிரீதன் ஆனேன் என்று சொல்லும்படி
ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்
என்பது கருத்து.
2. ‘இனி என்ன குறை?’ என்று
ஈடுபடுகிறது என்? ‘பொய்ந்நின்ற ஞானம்’
தொடங்கி இத்துணையும் கலவியும் பிரிவுமாயன்றோ சென்றது?
அவற்றைக்காட்டிலும் இவ்விரண்டு திருவாய்மொழிகளுக்கும் அதிசயம் என்?’
என்ன, அருளிச்செய்கிறார்,
‘மேல்’ பொய்ந்நின்றஞானம்’’ என்று தொடங்கி,
‘பொய்ந்நின்றஞானம்’ என்னுமிது, திருவிருத்தம்,
முதற்பாசுரம்.
3. ‘அர்ச்சிராதி
மார்க்கம் முதலாகப் பலம் பெற வேண்டியிருக்க, இதனையே
பலமாகச் சொல்லுகிறது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பேற்றுக்கு’ என்று தொடங்கி. என்றது, ‘அங்குப் போய்ச்
செய்யும்அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம்
முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்தானாகையினாலே,
அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
4. பேற்றுக்கு,
இதற்கு அவ்வருகு சொல்லலாவது இல்லை என்றதற்குச் சம்வரதம்
காட்டுகிறார், ‘சூழ்விசும்பணிமுகில்’
என்று தொடங்கி. என்றது,
‘இத்திருவாய்மொழியிலுண்டான அனுபவ கைங்கரியங்கள் அர்ச்ராதி கதிக்குப்
பின்பு பெறத் தக்கனவாகையாலே, அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற
‘சூழ்விசும்பணி
முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்னர்
இத்திருவாய்மொழி அமையப் பெற்றதில்லையே!’ என்றபடி.
‘சூழ்
விசும்பணிமுகில்’ என்பது, திருவாய். 10. 9 : 1.
|