பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
155

இருத்தல், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’ 1தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய், ஆகாசம் பரந்திருத்தலைப்போல அன்றிக்கே, ஜாதி பொருள்கள்தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், 2இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ? 3இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள் முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார், ‘இருந்து’ என்கிறார். அன்றிக்கே, 4‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால் வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

    ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல - 5சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே உலகமடையச் செங்கோல் செல்லும்

_____________________________________________________

1. மேலே கூறிய மூன்றனையும் மாறாடி அருளிச்செய்கிறார், ‘தன்னை ஒழிந்தார்’
  என்று தொடங்கி. ‘தன்னையொழிந்தாரடையத் தனக்கு அடிமை செய்யக்
  கடவனாய்’ என்றது, இறைவனாயிருத்தலை விளக்கியபடி. ‘தான் எங்கும்
  பரந்திருப்பவனாய்’ என்றது, எங்கும் பரந்திருத்தலைக் கூறியபடி.
  ‘பரந்திருத்தலை’ விளக்குகிறார், ‘ஆகாசம்’ என்றது முதல் ‘இருக்கக்கடவனாய்’
  என்றது முடிய. ‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல்’
  என்றதனை விளக்குகிறார், ‘இப்படிப் பரந்திருத்தல்தான்’ என்று தொடங்கி.

2. ஆக, ‘இப்படிப் பரந்திருத்தல்தான் ஏவுவதற்காகவன்றோ?’ என்றது முடிய,
  ‘வீற்று’ என்ற பதத்தின் பொருளை விளக்கிக் கூறியபடி.

3. ‘இருந்து’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இவ்வருகுள்ளாரை’
  என்று தொடங்கி. இதனால், ‘தர்மாதிபீடம்’ சொல்லப்படுகிறது. ‘அஞ்ஞானம்
  முதலானவைகள்’ என்றது, ஞான தர்ம வைராக்ய ஐஸ்வர்யங்களையும்,
  அஞ்ஞான அதர்ம அவைராக்ய அநைஸ்வர்யங்களையும் குறித்தபடி.

4. ‘வீற்றிருந்து’ என்றதனை இரண்டு சொற்களாகக் கொள்ளாது, ஒரே
  சொல்லாகக் கொண்டு பொருள் அருளிச்செய்கிறார், ‘தன்னினின்றும்’ என்று
  தொடங்கி.

5. மேலேயுள்ள ‘இருந்து’ என்ற பதத்தை இங்கும் கூட்டி பாவம்
  அருளிச்செய்கிறார், ‘சுற்றுப்பயணம் வந்து’ என்று தொடங்கி.