பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
161

கண

கண்களையுடையவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைச் செறிந்த சொற்களாலே தொடுக்கப்பட்ட இசை பொருந்திய மாலைகளாலே, அகன்ற இவ்வுலகத்திலே கொடிய நோய்கள் முழுதும் அழியும்படியாகத் துதித்து அனுபவிக்கப் பெற்றேன்,’ என்கிறார்.

    வி-கு : மைய கண் - கரிய கண் என்னலுமாம். ‘விண்ணோர் பெருமான்றன்னை வியன் ஞாலத்து வெய்ய நோய்கள் முழுதும் வீய இசை மாலைகள் ஏந்தி உள்ளப்பெற்றேன்’ எனக் கூட்டுக.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இம்மஹத்தான ஐசுவரியத்துக்கு அடியான திருமகள் கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார். சர்வேசுவரன் திருவருளாலே அவன் கருத்து அறிந்து நடத்தும் பிரமனுடைய திருவருள் காரணமாக, நாரதர் முதலிய முனிவர்கள் மூலமாக ஆயிற்று ஸ்ரீமத் ராமாயணம் தோன்றியது; இப்படிப்பட்ட ஸ்ரீராமாயணத்திற்காட்டில் தாம் அருளிச்செய்த பிரபந்தத்திற்கு ஏற்றம் அருளிச்செய்கிறார். ‘திருமாலால் அருளப்பட்ட சடகோபன்’ என்கிறபடியே, அவர்கள் இருவருடையவும் திருவருள் அடியாக ஆயிற்று இப்பிரபந்தங்கள் பிறந்தன. ‘சீதாயாஸ்சரிதம் மஹத் - சீதையினுடைய பெருமை பொருந்திய சரிதம்’ என்னுமது இரண்டுக்கும் ஒக்கும்;

_____________________________________________________

1. இப்பாசுரத்தில் ‘மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை
  மார்பினன்’(ஸ்ரீயபதித்வம்) என்று கூறுவதற்கு நான்கு வகையில் கருத்து
  அருளிச்செய்கிறார்: ‘இம்மஹத்தான ஜஸ்வர்யத்துக்கு அடியான திருமகள்
  கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார்’ என்பது, முதல் கருத்து.
  ‘இம்மஹத்தான ஐஸ்வரியம்’ என்றது, முதற்பாசுரத்தின் முன்னிரண்டு
  அடிகளையும் திருவுள்ளம் பற்றி. ‘சர்வேசுவரன் திருவருளாலே’ என்றது
  முதல் ‘இப்பிரபந்தங்கள் பிறந்தன’ என்றது முடிய, இரண்டாவது கருத்து.
  இந்த இரண்டாவது கருத்தால், ஸ்ரீராமாயணத்தைக்காட்டிலும்
  திருவாய்மொழிக்கு ஏற்றத்தையும் ஏற்றத்திற்குரிய காரணத்தையும்
  அருளிச்செய்கிறார். இங்கு,

  ‘நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற
  ஆரணக் கவிதை செய்தா னறிந்தவான் மீகி என்பான்’

  என்ற கம்பராமாயணத் தனியனை நினைவு கூர்க.

      ‘சீதாயாஸ் சரிதம்’ என்றது முதல், ‘என்றாரேயன்றோ இவரும்’ என்றது
  முடிய, மூன்றாவது கருத்து. கவிக்கு விஷயம் பிராட்டியும் அவனும் என்கிற
  இது, ஸ்ரீராமாயணத்திற்கும் இப்பிரபந்தத்திற்கும் ஒக்கும் என்பது மூன்றாவதன்
  கருத்து. ‘அவன் பாடித் தனியே’ என்றது முதல் ‘ஆயிற்றுக்கவி பாடிற்று’
  என்றது முடிய, நான்காவது கருத்து, ‘அவன்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.
  ஆக, ஸ்ரீராமாயணத்துக்கும் பிரபந்தத்துக்கும் இரண்டு ஆகாரத்தாலே
  வேறுபாடும், ஓர் ஆகாரத்தாலே ஒப்புமையும் கூறியபடி.