|
New Page 2
‘திருமாலவன் கவி யாது
கற்றேன்?’ என்றாரே அன்றோ இவரும்? அவன் பாடித் தனியே கேட்பித்தான்; அவளோடே கூடக் கேட்பித்து
அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்; மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை
ஆயிற்றுக் கவி பாடிற்று.
1மைய
கண்ணாள் - ‘கறுத்த கண்களையுடையவள்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, பெரிய பிராட்டியார் திருக்கண்களாலே
ஒருகால் பார்த்தால் ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே சர்வேசுவரன் திருமேனி குளிரும்படி
யாயிற்று இருப்பது; ஆதலால், ‘மைய கண்ணாள்’ என்கிறார் என்னுதல். ‘மழைக்கண் மடந்தை’
என்னப்படுமவளன்றோ அவள்?’ 2இவள் திருவருள் இல்லாமையேயன்றோ அல்லாதார் விரூபாக்ஷர்
ஆகிறது? ‘இந்த உலகமானது எந்தப் பிராட்டியின் புருவங்களினுடைய செயல்களின் விசேடத்தால்
நியமிக்கும் பொருளாயும், நியமிக்கப்படுகின்ற பொருளாயும் ஆகுகையாகிற தாரதம்மியத்தாலே மேடு
பள்ளமுள்ளதாக ஆகின்றதோ, அந்த ஸ்ரீரங்கநாயகியின்பொருட்டு நமஸ்காரம்,’ என்கிறபடியே, அவள்
உண்மையாலும் இன்மையாலுமேயன்றோ ஒருவன் அழகிய மணவாளப் பிள்ளையாயிருக்கிறதும், ஒருவன்
பிச்சையேற்பானுமாயிருக்கிறதும்?
மலர்மேல் உறைவாள்
- செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். 3அவயவ
_____________________________________________________
1. மைய கண்ணாள் - கறுத்த
கண்களையுடையவள். இதற்குப் பிரமாணம்,
‘கறுத்த கண்களையுடையவள்’ என்பது. இது, ஸ்ரீராமா.
சுந். 16 : 5.
இப்பொருளால் அவயவ சோபையைக் கூறியபடி. அன்றிக்கே, ‘மை’ என்று
கருமையாய், அதனாலே கிடைத்த பொருள் குளிர்ச்சியாகக் கொண்டு, அதற்கு
பாவம் அருளிச்செய்கிறார்,
‘பெரிய பிராட்டியார்’ என்று தொடங்கி.
திருக்கண்களின் குளிர்ச்சி மழை பெய்தாற்போலே
இருப்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘மழைக்கண் மடந்தை’ என்று, இது, திருவிருத்தம்,
52.
2. ‘செய்ய கோலத் தடங்கண்ணன்’
என்றதனைக் கடாக்ஷித்து, பாவம்
அருளிச்செய்கிறார், ‘இவள் திருவருள்’ என்று தொடங்கி. விரூபாக்ஷர்
-
சிவன். ‘இவள் திருவருள் உண்டானால் தாமரைக் கண்ணனாகையும், அது
இல்லாவிடில் விரூபாக்ஷனாகையுமாகிற
இதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘இந்த உலகமானது’ என்று தொடங்கி. இது,
ஸ்ரீரங்கராஜஸ்தவம்.
3. ‘மைய கண்ணாள்’ என்றதனையும் கூட்டி பாவம் அருளிச்செய்கிறார்,
‘அவயவசோபை’ என்று தொடங்கி.
|