பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
164

1இவர

1இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு அவன் பிராட்டியைப் பார்க்க, அவள், ‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் அத்தைக் கேட்கலாகாதோ?’ என்று சொல்ல, இப்படிக்காணும்கேட்டது. விண்ணோர் பெருமான் தன்னை - 2இக்கண்ணின் குமிழிக்கீழே விளையும் நாட்டினைச் சொல்லுகிறது. அன்றிக்கே, ‘இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டில் எறித்த நிலா ஆகாமல், ‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந்தலைமகனை என்கிறபடியே, அனுபவிக்கின்றவர்களையுடையவனை’ என்னுதல். 3ஆக, பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.

    மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் -சர்வேசுவரனுடைய வேறுபட்ட சிறப்பினை நினைத்துக் ‘கவி பாட’ என்று ஒருப்பட்டு, 4‘வேதவாக்குகள் மனத்தால் நினைக்கவும் முடியாமல் எந்த ஆனந்த குணத்தினின்றும் மீளுகின்றனவோ’ என்கிறபடியே மீளாமல், விஷயத்துக்கு நேரான பாசுரம் இட்டுக் கவி பாடப் பெற்றேன். ‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல், என்றது, 5‘செறிவில்லாத பந்தமாய் இருக்கையன்றிக்கே, கட்டுடைத்தாய் இருக்கையாதல், விஷயத்தை விளாக்குலை கொள்ளவற்றாய்

_____________________________________________________

1. இருவருடைய கண்களின் அழகையும் வர்ணிப்பதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இவர் கவி’ என்று தொடங்கி.

2. ‘இக்கண்ணின் குமிழிக்கீழே’ என்றது, ஸ்வாமியான தன்மையால் உண்டான
  இரட்சகத்துவம் சொன்னபடி. ஆக, இதனால், தாரகத்துவமும்
  போஷகத்துவமும் சொன்னபடி. குமிழி - மதகு மோழை. இரண்டாவது
  பொருளிலே,  ‘பெருமான்’ என்றது, அளவிறந்த இனிமையைச் சொல்லுகிறது.
  ‘தாமரைக் கண்ணனை’ என்பது, திருவாய்மொழி, 2. 6 : 3.

3. மேலே கூறிய எல்லாவற்றையுங்கூட்டி பாவம் அருளிச்செய்கிறார், ‘ஆக’
  என்று தொடங்கி.

4. தைத்திரீய ஆனந். 9 : 1. ‘விஷயத்துக்கு நேரான பாசுரம்’ என்றது, ‘மொய்’
  என்ற பதத்திற்கு எழுதியுள்ள இருவகைப் பொருள்களுள் இரண்டாவது
  பொருளாகிய ‘பெருமை’ என்பதனைப் பற்ற.

5. ‘செறிவெனப்படுவது நெகிழிசை யின்மை’ என்பது தண்டியலங்காரம்.