|
இ
இருக்கையாதல்’ என்றபடி.
வாசனை மிக்குள்ள மாலை போலே, கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை
மாலைகள்’ என்கிறது. நினைத்து அன்று போலேகாணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப்
பெற்றேன்’ என்கிறது. இதனால், 1‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி
இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது. 2‘என் முன் சொல்லும்’ என்கிறபடியே, அவன்
நினைவு மாறாமையாலே இது சேர விழுமே அன்றோ?’ 3‘நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்னது ஆகையாலே சேர விழும்’ என்றபடி.
அன்றிக்கே,
‘‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியே
ஆயிற்று அனுபவிக்கிறது’ என்னலுமாம். 4தாமும் உறுப்புகளைப்போன்று ஈடுபட்டார். என்றது,
5‘நாட்டினாய்
_____________________________________________________
1. ‘மனம் முன்னே’ என்பது,
யஜூஸ் சம்ஹிதை. ‘பிரீதி வழிந்த சொல்
ஆகையாலே, நியதி இல்லையாயிற்று’ என்றபடி.
2. ‘ஆயின், கவி சேர
விழுந்தபடி எங்ஙனே?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘என்முன் சொல்லும்’ என்று தொடங்கி.
இது,
திருவாய்மொழி, 7. 9 : 2.
3. ‘ஆம்முதல் வன்இவன்
என்றுதன் தேற்றி’என்
நாமுதல் வந்து புகுந்துநல்
லின்கவி
தூமுதல் பத்தர்க்குத்
தான்தன்னைச் சொன்னஎன்
வாய்முதல் அப்பனை என்று
மறப்பனோ?’
என்பது திருவாய்மொழி,
7. 9 : 3.
4. ‘கரணங்கள் தனித்தனியே
அனுபவிக்கின்றனவாகில், ‘முடியானே’ என்ற
திருவாய்மொழியிற்போன்று, அவற்றைக் கர்த்தாக்களாகச்
சொல்லாது, ‘ஏத்தி
உள்ளப் பெற்றேன்’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘தாமும்’ என்று தொடங்கி. கரணங்களைப் போன்று
தாமும் அந்வயித்ததற்குப் பிரமாணம், ‘நாட்டினாய்’
என்ற திருப்பாசுரம்.
5. ‘நாட்டினாய்’
- இது, பெரிய திருமொழி, 8. 10 : 9. இதற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள்
வருமாறு : நாட்டினாய் என்னை உனக்கு முன்
தொண்டாக - அடிமையில் இனிமையறியாத என்னை, ‘இவன்
நம்முடையான்’
என்று அங்கே நாடு என்று நிறுத்தி வைத்தாய்; உன்னுடைய
அங்கீகாரத்தைக்கொண்டு
முன்புள்ள கர்மங்களை வாசனையோடே
போக்கினேன். பாட்டினால் உன்னை என் நெஞ்சத்திருந்தமை காட்டினாய்
-
பாடின வழியாலே, சர்வஞ்ஞனாய் சர்வசத்தியாயிருக்கிற நீ என் மனத்திலே
இருந்தமையைப் பிரகாசிப்பித்தாய்.
கண்ணபுரத்துறை அம்மானே - பாடுவித்த
ஊர் திருக்கண்ணபுரம், பாடுவித்த முக்கோட்டை இருக்கிறபடி.
|