|
வ
வி-கு :
தொழுவார் - பெயர். ‘ஆவி, என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன்,’ என்க.
ஈடு :
நாலாம் பாட்டு. 1‘அநந்யப் பிரயோஜனரையும், முதலிலேயே பயன்களில் இழியாத நித்தியசூரிகளையுமுடையனாய்
வைத்து, நித்தியசூரிகளுக்கு அவ்வருகான தான், பிறந்து இறந்து உழல்கின்ற தம் பக்கல் செய்த
மஹோபகாரத்தைத் தம்மால் அளவிட்டு அறிய முடிகிறது இல்லை,’ என்கிறார்.
மேவி நின்று தொழுவார்
- கிட்டக்கொண்டு 2‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு
பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே, 3‘வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார்’ என்கிறபடியே, அவன்றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
4‘இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்’ என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.
வினை போக - 5‘அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான
_____________________________________________________
1. பாசுரம் முழுதினையும்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
அநந்யப்பிரயோஜனர் -வேறு பிரயோசனங்களை
விரும்பாதவர். ‘அம்மான்’
என்றதனைக் கடாக்ஷித்து, ‘அவ்வருகான தான்’ என்கிறார். ‘யான் அறியேன்
செய்த ஆற்றை’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘பிறந்து இறந்து’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. ‘நான் உனக்குத்
தருகிறேன்’ என்றது, ‘நீ கொடுக்கும் பலத்துக்குத்
தகுதியாகச் சாதநானுஷ்டானத்தைச் செய்கிறேன்,’
என்றபடி.
3. ‘எழுவார் விடைகொள்வார்
ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல்
- தொழுவார்’
என்பது முதல் திருவந்.
26.
4. ‘இன்றுவந் தித்தனையும்
அமுது செய்திடப் பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக்
கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’
என்பது நாய்ச்சியார் திருமொழி,
9 : 7.
5. அவர்களுக்கு - மேவி
நின்று தொழுமவர்களுக்கு. ‘பாப
விமோசனமாகையாலேயன்றோ, அநந்யப் பிரயோஜனராய்க்கொண்டு
தொழுகிறார்கள்?
அவர்களுக்குப் பின்னை வினையுண்டோ?’ என்னில்
என்றபடி. அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘வேறு பிரயோஜனங்களிலே’
என்று தொடங்கி. இதனால், ‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும்,
பாபஹேதுவான
சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம்
செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக்
காரணம் உண்டேயன்றோ?
அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.
|