பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
171

ப

பாவங்கள் போகும்படியாக. மேவும் பிரான் - இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும் வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ? நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்; 1‘மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்டு, அடிஎடுப்பது அன்றோ அழகு?’ என்றாரே அன்றோ? பிரான் -உபகாரமே இயல்பு என்னும்படி இருக்குமவன்.

    2ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாயிருந்து, பின்பு தன்னையே பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று. முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி இருக்கின்ற திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும்படி சொல்லுகிறது மேல் : தூவி அம் புள் உடையான் - ‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியையுடையவன் என்பதனையும், ‘அம் புள்’ என்றதனால், 3‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே, சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி. தூவி - சிறகு. அம் -அழகு. அடல் ஆழி - 4‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார்

_____________________________________________________

1. ‘அவன் கிட்டினால் பாவங்கள் அழிந்துபோம்,’ என்பதற்குப் பிரமாணம்,
  ‘மடியடக்கி’ என்று தொடங்குவது. 

  ‘இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
  செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் - அங்கே
  மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்டு
  அடியெடுப்ப தன்றோ அழகு?’

  என்பது பெரிய திருவந். 30.

2. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஆக, முதலடியில்’ என்று
  தொடங்கி.

3. தோத்திர ரத்நம், 41.

4. ‘ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும்
   பூங்கா ரரவணையான்
பொன்மேனி - யாங்காண
   வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்

   வல்லரே யல்லரே? வாழ்த்து.’

(நான்முகன் திரு. 10.)