|
New Page 1
‘அடல் ஆழி’
என்கிறார். அடல் - மிடுக்கு. அம்மான் தன்னை - ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,
திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார், ‘தூவியம்
புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.
நா இயலால் இசை
மாலைகள் ஏத்தி - நெஞ்சு ஒழியவும், வாக்கின் தொழில் மாத்திரமே இசை மாலைகள் ஆயிற்றன;
என்றது, நாப்புரட்டினது எல்லாம் இயலும் இசையுமாய்க் கிடக்கையைத் தெரிவித்தபடி. ஏத்தி நண்ணப்
பெற்றேன் - இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது. ஆவி என் ஆவியைச் செய்த
ஆற்றை யான் அறியேன் - 1‘உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ’ என்றும்,
‘ஆத்மந ஆகாஸ : ஸம்பூத :- பரமாத்துமாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும், ‘சர்வாத்துமா’
என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’
என்கிறார், தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார், ‘என் ஆவியை’
என்கிறார், என்றது, அவன் விபு; தாம் அணு என்பதனைத் தெரிவித்தபடி. 2‘இந்தப்
பரமாத்துமாதானே சந்தோஷத்தைக் கொடுக்கின்றான்?’ என்றும், 3‘வீவில் இன்பம்
மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, அவனோடு ஒத்த ஆனந்தத்தை உடையவராம்படி
தம்மைச் செய்தமையைத் தெரிவிப்பார், ‘செய்த ஆற்றை’ என்கிறார், அன்றிக்கே,
‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு பெற்றானாகத்
தலையாலே சுமப்பதே!’ 4என்கிறார் என்னுதல். அனுபவித்துக் குமிழிநீர்
_____________________________________________________
1. ‘ஆவி’
என்பது, பொதுவான சொல்லாகையாலே, அதற்கு, ‘ஒரு காரணமும்
பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆத்துமாவாய்
இருப்பவன்’ என்ற
பொருளை அருளிச்செய்து, மேற்கோள்களும் காட்டுகிறார்,
‘உலகங்கட்கெல்லாம்’
என்று தொடங்கி. இது, திருவாய். 8. 1 : 5.
‘ஆத்மந:’ என்பது, தைத்திரீய ஆனந்.
1.
2. ஆனந்தவல்லி. 7.
3. திருவாய்,
4. 5 : 3.
4. ஆக, ‘செய்தவாற்றை’
என்பதற்கு இரண்டு கருத்து அருளிச்செய்தபடி.
முதலாவது தம்மை ஒக்க அருள் செய்தல்; இரண்டாவது,
‘தலையாலே
சுமப்பதே!’ என்பது.
|