பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
189

நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைக் கவி சொல்ல வல்ல எனக்கு இனி ஒப்பாவார் உளரோ?’ என்கிறார்.

    வி-கு : கூன் நல் - கூனல். வான் அம் கோன் - வானக்கோன்; அம் - சாரியை.

    ஈடு: ஒன்பதாம் பாட்டு. 1‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார். 2நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்; முத்தர்கள் 3‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல் நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்; இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில், ‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும். ஸ்ரீ பராசரபகவானும் ஸ்ரீ வேதவியாசபகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்; ஸ்ரீ சௌனகபகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்; அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.

    வானத்தும் - சுவர்க்கத்திலும், வானத்து உள் உம்பரும் - அதற்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர் லோகம் முதலியவைகளிலும். அன்றிக்கே, ‘வானத்தும் வானத்துள் உம்பரும் என்பதற்குச் சுவர்க்கம் முதலான உபரிதனலோகங்களிலும் அவற்றுக்குள்ளே மேலே இருக்கிற பிரம

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘முதலான’ என்றதனால், பரத்துவம் வியூகம் அர்ச்சை இவற்றையும் கொள்க.
  ‘தவிராது நின்றான்’ என்றதனை நோக்கி ‘எங்கும் பரந்திருத்தல்’ என்றும்,
  ‘குடமாடி’ என்றதனை நோக்கி, ‘அவதாரங்கள்’ என்றும் அருளிச்செய்கிறார்.
  ‘வானக்கோனை’ என்றதனால் பரத்துவத்தைக் கொள்க. இம்மூன்றையும்
  அருளிச் செய்தது மற்றை இரண்டுக்கும் உபலக்ஷணம்.

2. ‘மற்றும், கவி பாடுகின்றவர்கள் இலரோ? ‘எதிருண்டோ?’ என்பது என்?’
  என்னும் வினாவிற்கு விடையாக, ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

3. சாந்தோக்யம், 8. 12 : 3.