|
New Page 1
லோகம் முதலானவைகளிலும்
இருக்கிற பிரமன் முதலான தேவர்கள்’ என்று பொருள் கூறலுமாம். மண்ணுள்ளும் - பூமியிலும், மண்ணின்
கீழ்த்தானத்தும் - கீழே உண்டான பாதாளம் முதலியவைகளிலும், எண்திசையும் - எட்டுத்திக்குகளிலும்,
தவிராது நின்றான்தன்னை - அவ்வத்தேசங்களிலும் அவ்வத்தேசங்களிலே இருக்கிற தேவர்கள் முதலான
எல்லாப் பொருள்களிலும், 1கடல் கோத்தாற் போலே எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து
இருக்கிறவனை. இதனால், அணு அளவான பொருள்களிலும் விபுவாய் இருக்கிற பொருளிலும் வாசி
சொல்லுகிறது; ‘எங்ஙனே’ என்னில், அணுவான ஆத்துமா, சரீரம் எங்கும் பரந்திருக்க மாட்டாது;
விபுவான ஆகாயத்திற்கு ஏவுகின்ற தன்மையோடு கூடிப் பரந்திருக்கும் தன்மை இல்லை.
இப்படி எங்கும்
பரந்து நிற்கிறவன், பரந்திருக்கப்படுகின்ற பொருள்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி
சொல்லுகிறது மேல் : கூன் நல் சங்கம் தடக்கையவனை - ‘இப்படி அவதரிப்பதுதான் 2இதரசஜாதீயனாயோ?
என்னில், ‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே, தன்னுடைய பிரகிருதி
சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது.
என்றது, ‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத்
தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.
_________________________________________________
1. ‘தவிராது’ என்றதற்குப்
பொருள், ‘கடல் கோத்தாற்போலே எங்கும் ஒக்கப்
பரந்து’ என்பது. ‘தவிராது நின்றான்’ என்றதனால்
பலித்த பொருளை
அருளிச்செய்கிறார், ‘அணு அளவான பொருள்களிலும்’ என்று தொடங்கி.
அணு அளவான
பொருள் - ஆத்துமா. விபுவான பொருள் -ஆகாயம்.
2. ‘இதர சஜாதீயனாயோ என்னில்’ என்றது, ‘இந்தப் பிரகிருதி சம்பந்தப்பட்ட
சரீரத்தையுடையனாயோ?’
என்றபடி. ‘ஆதியஞ்சோதி’ என்கிற
பிரமாணப்படியே, ‘இதர சஜாதீயனாயிருந்தாலும், திருமேனி பிரகிருதி
சம்பந்தப்பட்டதாயிராமல், ‘திவ்யம்’ என்கிறபடியே அப்ராகிருதமாயிருக்கும்’
என்கிறார்.
‘ஆதியஞ்சோதி’ என்பது, திருவாய். 3. 5 : 5. அப்ராகிருதமான
திருமேனியை இதர சஜாதீயமாக்கினதற்குப்
பிரமாணம், ‘தேவர்களுக்கும்
தேவர்களான’ என்று தொடங்குவது. இது, பாகவதம், 5 : 3.
|