பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
195

சூழப

சூழப்பட்ட திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கின்ற காரிமாறரான சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்லுகிறவர்கட்கு, வாசனை மாறாத தாமரைப் பூவில், எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார் வினையைத் தீர்ப்பார்,’ என்கிறார்.

    வி-கு : வாரி - வருவாய் : வரவுக்குக் கருவியாய் இருப்பது. இ -கருவிப்பொருள் விகுதி. காரி - ஆழ்வாருடைய தந்தையார் பெயர். மாறன் சடகோபன் - இவருடைய திருப்பெயர். வேரி - வாசனை. தீர்க்கும் - செய்யுமென் முற்று.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரிய பிராட்டியார் தம் பொறுப்பாகக் கொண்டு எல்லாத் துக்கங்களையும் போக்குவார்,’ என்கிறார்.

    மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை - 2எப்பொழுதும் மழை பெய்கையாலே சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க் காட்சிக்கு இனியதான திருமலையையுடைய சர்வேசுவரனை ஆயிற்றுக் கவி பாடிற்று; 3‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று. 4‘விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய், மண்முதல் சேர்வுற்று அருவி செய்யாநிற்கும் மாமலை’ ஆகையாலே, அறற்றலையாய்க் காட்சிக்கு இனியதாய்

_____________________________________________________

1. ‘பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே’ என்றதிலே நோக்காக அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. மாரி மாறாமையாலே தண் அம் மலையாயிருக்கிறது என்று கொண்டு
  பொருள் அருளிச்செய்கிறார், ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.

3. ‘இத்திருவாய்மொழியில் பரமபதநாதனையன்றோ கவி பாடிற்று?
  திருவேங்கடமுடையானைக் கவி பாடிற்று என்பது என்?’ என்னும் வினாவிற்கு
  விடையாக ‘நமக்கும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இது,
  இத்திருவாய்மொழியில் எட்டாம் பாசுரம். அநபாயினி - பிரியாமல்
  இருப்பவள்.

4. திருவிருத்தம், 50. ‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத்
  தலையிலேயுடையது’ என்பதும், ‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும்
  பொருள்.