ஸ்ரீ சத
ஸ்ரீ சத்ருக்நாழ்வான்
அருகில் இருந்தார் என்னும் இதுவும் இல்லையாயிற்று. 1‘பெருமாள் காடேற எழுந்தருளினார்;
சக்கரவர்த்தி துஞ்சினான்; இனி நீயே அன்றோ இராச்சியத்துக்குக் கடவாய்? உன்னைக் கொண்டன்றோ
நாங்கள் வாழ இருக்கிறது?’ என்கிறார்கள் அல்லர்; ‘உன் முகத்தில் உறாவுதல் காணக்காண உன்னை
இழக்கமாட்டார்; அவர் வரவு அணித்து என்றன்றோ நாங்கள் வாழ்கிறது?’ என்றார்களே அன்றோ?
அப்படியே, இவளைக் கொண்டே வாழ இருக்கிறார்கள். ஆகையாலே, எல்லாம் ஒக்க இவள் நிலையைக்
கண்டு கலங்கிக் கிடந்தார்கள்.
இங்ஙனங்கிடக்க,
இவ்வளவிலே நாட்டிலே 2வேரறிவார் விறகறிவார் மந்திரமறிவார் மருந்தறிவார் அடங்கலும்
வந்து புகுர, அவ்வளவிலே, வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார், ‘ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வீட்டினைத்
தூஷிக்க நமக்கு நல்ல அளவு’ என்று வந்து புகுர, இவளுடைய உறவு முறையிலுள்ளார் கலங்கிக் கிடக்கையாலே,
‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘பரிஹாரம் இன்னது’ என்றும் அறியாதே, அவர்களிலே ஒருத்தி
ஒரு கட்டுவிச்சியை ‘இவள் நோய் யாது? நோய்க்கு நிதானம் யாது?’ என்று கேட்டு. அவள் சொற்படியே,
‘ஆராதனத்துக்குரிய பொருள்கள், நிந்திக்கப்படுகின்ற கள் முதலானவைகள்; தெய்வம், மிகத் தாழ்ந்த
தெய்வம்; சாஸ்திரம், வேதங்கட்குப் புறம்பான ஆகமங்கள்; ஆசாரியர்கள், பூசாரிகள்’ என்கிறபடியே,
நிந்திக்கப்படுகின்ற பொருளை இவளைப் பாதுகாப்பதற்குப் பரிகரமாகக் கொண்டு, புன்சிறு தெய்வம்
ஆவேசித்ததாகக் கொண்டு, வேறு தெய்வ சம்பந்தமுடையாரை ஆசாரியராகக் கொண்டு, இவள் பக்கல்
உண்டான அன்பின் மிகுதியாலே, ‘இவள் பிழைக்குமாகில் யாதேனும் ஒரு வழியாலேயாகிலும்
_____________________________________________________
1. ‘தலைவி மோஹித்தால்,
உறவினர்களும் மோஹிப்பதற்குக் காரணம் என்?’
எனின,் இவளைக் கொண்டே ஜீவிக்க
இருக்கிறார்கள் ஆகையாலே,
அவர்களும் மோஹித்தார்கள் என்று கூறத் திருவுள்ளம் பற்றி, அதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பெருமாள்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
அயோ. 87 : 8.
அவர் வரவு - பெருமாள் வருகை. கலங்கிக் கிடக்க -
பரிஹாரம் இன்னதென்று அறியாமலே கலங்கிக்
கிடக்க.
2. வேர் -
பச்சை மூலிகை. விறகு - உலர்ந்த மூலிகை.
|