உணர
உணர்த்தி அறும்படி ஆயினார்.
1பகவானைப் பெறுகின்ற காலத்தில் உணர்த்தியும், பெறாத காலத்தில் மோஹமுமாய்ச்
சொல்லும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதொன்றாயிற்று.
2மற்றும்,
ஞாநாதிகராய்ப் பகவத் விஷயத்தில் கைவைத்தார்களாயிருக்குமவர்களிலும் ஸ்ரீவசிஷ்ட பகவான் புத்திரனுடைய
பிரிவால் வந்தவாறே கடலிலே புகுவது, மலையிலே ஏறி விழுவது ஆனான்; ஸ்ரீவேதவியாசபகவானும்
சாயாசுகனைக் கொண்டு உய்ந்தான்; ஆதலால், பகவத் விஷயத்தில் லாபாலாபமே பேறு இழவாய்
இருக்கும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதாகும்.
3இப்படி
இவள் மோஹித்துக் கிடக்க, இவளைக் கண்ட உறவின் முறையார் எல்லாரும் பிரமாத்திரத்தாலே கட்டுப்பட்டவர்களைப்
போன்று மோஹித்து, செய்யத்தகும் காரியங்கள் இவை, செய்யத்தகாத காரியங்கள் இவை என அறுதியிடுவதற்கு
ஆற்றல் இல்லாதவராய்க் கலங்கிக் கிடக்க, அங்குப்போலே உணர்ந்திருந்து நோக்குகைக்கு ஸ்ரீஜாம்பவான்,
மஹாராஜர், திருவடி போல்வாரும் இல்லையாயிற்று. 4‘அந்த நிலையோடு கூடிய ஸ்ரீ பரதாழ்வான்
பக்கத்தில் இருந்த ஸ்ரீ சத்ருக்நாழ்வான்’ என்கிறபடியே,
_____________________________________________________
1. ஸ்வாபதேசத்திலே
வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘பகவானைப் பெறுகின்ற
காலத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.
2. ‘‘ஒருவர்க்குமே’ என்கிறது
என்? அல்லாதார்க்கும் இல்லையோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மற்றும்’ என்று
தொடங்கி.
புத்திரவியோகம் - புத்திரன் இறத்தல்; வியோகம் - இறப்பு; பிரிவு.
‘சாயாசுகனைக் கொண்டு’
என்றது, வியாசபகவானுடைய மோகத்தைக் கண்டு
அதனைத் தீர்ப்பதற்காகச் சிவன் பிரதிமை ரூபமாகச்
சிருஷ்டித்துக்
கொடுத்ததைக் குறித்தபடி.
3. மேலே சுருங்கச்
சொல்லியதனை விரித்து அருளிச்செய்கிறார், ‘இப்படி’
என்று தொடங்கி. ‘பிரமாத்திரத்தாலே
கட்டுப்பட்டவர்களைப் போன்று’
என்றது, இராம இராவண யுத்தத்திலே இந்திரசித்தினால் விடப்பட்ட
பிரமாத்திரத்தால் வானர சேனைகளும் இளைய பெருமாளும்
கட்டுப்பட்டிருந்ததனைக் குறித்தபடி. இதனை,
உயுத்த காண்டம் பிரமாத்திரப்
படலத்தால் உணரலாகும். ‘மஹாராஜர்’ என்றது, சுக்கிரீவனை. திருவடி
-
அனுமான்.
4. மேலதற்கே
மற்றும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘அந்த நிலையோடு
கூடிய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
அயோத். 87 : 4.
|