ந
நினைப்பவை இவள் நோவிற்குப்
பரிஹாரம் அல்ல; அழிவிற்கே காரணமாமித்தனை; ஆன பின்பு, 1‘பகவானுடைய நாமங்களைச்
சொல்லுவதாலும் பாகவத பாத தூளியாலும் பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிற அவள் பாசுரத்தாலே
தம் நிலையைப் பேசுகிறார்.
2இவர்தாம்,
‘உம்மைப் பிரிந்தால் சீதை இல்லாதவள் ஆவாள்; அப்படியே, நானும் இல்லாதவன் ஆவேன்,’ என்றும்,
‘அடியவனான என்னைத் தேவரீருக்குப் பின்னேயே சஞ்சரிக்கும்படி செய்தருள வேண்டும்,’ என்றும்
சொல்லுகிறபடியே, பிரிவிலே தரியாமைக்கு இளையபெருமாளோடு ஒப்பர்; அவன் போகட்ட இடத்தே கிடக்கைக்கும்
குண அநுசந்தானத்தாலே பிழைத்திருக்கைக்கும் ஸ்ரீபரதாழ்வானோடு ஒப்பர்; எத்தனையேனும் ஆற்றாமை
கரை புரண்டாலும் ‘அத்தலையாலே பேறு,’ என்று இருக்கைக்குப் பிராட்டியோடு ஒப்பர்.
3‘உயர்வற
உயர்நலம்’ என்ற திருவாய்மொழியிலும் பரத்துவமே அன்றோ பேசிற்று? ‘பத்துடை அடியவர்’ என்ற திருவாய்மொழியில்
அவதார சௌலப்யத்தை அநுசந்தித்து மோஹித்தாரேயாயினும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில்
தூது விட வல்லராம்படி உணர்த்தியுடையவரானார்; ‘வீற்றிருந்தேழுலகு’ என்ற திருவாய்மொழியில்
பரத்துவத்தைக் கூறிய பின்னர், இத்திருவாய்மொழியில் தாமும் மோஹித்துத் தம் நிலையை நினைந்த
உறவினர்களும் மோஹித்து வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து கலக்கினாலும்
_____________________________________________________
1. இத்திருவாய்மொழியில்
வருகின்ற ‘பேர் சொல்லகிற்கில்’, ‘களிறட்ட பிரான்
திருநாமத்தால்’ என்ற பாசுரப் பகுதிகளைத்
திருவுள்ளம் பற்றிப்
‘பகவானுடைய நாமங்களைச் சொல்லுவதாலும்’ என்கிறார். ‘மாயன் தமரடி
நீறு’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பாகவத பாததூளியாலும்’ என்கிறார்.
2. ‘பிராட்டியின் நிலை
இவர்க்கு வரக் கூடுமோ?’ என்ன, ‘பிராட்டியின் நிலை
மாத்திரமன்றிக்கே, எல்லாரோடும் ஒப்பர்,’
என்கிறார், ‘இவர்தாம்’ என்று
தொடங்கி. ‘உம்மைப் பிரிந்தால்’ என்ற பொருளையுடைய சுலோகம்,
ஸ்ரீராமா. அயோத். 53 : 31. ‘அடியவனான என்னை’ என்ற
பொருளையுடைய சுலோகம், ஸ்ரீராமா.
அயோத். 31 : 32.
3. ‘உயர்வற
உயர்நலம்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும்
இத்திருவாய்மொழியில் துக்கம் அதிகரித்தது
என்கிறார், ‘உயர்வற’ என்று
தொடங்கி.
|