த
திருமுடி சூட்டி அடிமை செய்யக்கடவோம்,’
என்று பாரித்துக்கொண்டு வர, கைகேயி, ‘ராஜந் என்று உனக்கு முடி வாங்கி வைத்தேன்,’ என்ற
போது அவன் துடித்தாற்போலே, இவரும் சரீரத்தின் தோஷத்தை நினைத்து, அஞ்சித் துடித்தாராயிற்று,
1‘பொய்ந்நின்ற ஞானத்’திலே; ‘நான் அவர் அடியேன் அன்றோ? அவர் என் சொல்லை
மறுப்பரோ? இப்போதே மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்டுகிறேன்,’ என்று திருச்சித்திரகூடத்திலே
கிட்டுமளவும் பிறந்த தரிப்புப்போலே ஆயிற்று திருவாசிரியத்தில் பிறந்த தரிப்பு; பின்பு, பதினான்கு
ஆண்டு கூடி ஆசை வளர்ந்தாற்போலேயாயிற்று. திருவந்தாதியில் ஆசை பெருகினபடி; 2‘என்
நெஞ்சினார்தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்’, 3‘முயற்சி சுமந்து எழுந்து’
என்று கூறலாம்படி அன்றோ ஆசை பெருகினபடி? மீண்டு எழுந்தருளித் திருமுடி சூட்டிக்கொண்ட பின்னர்
அவன் எண்ணம் தலைக்கட்டினாற்போலே ஆயிற்றுத் திருவாய்மொழியில் இவரை அனுபவிப்பித்தபடி.
4மேல்
‘வீற்றிருந்து ஏழுலகு’ என்ற திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்ததான பிரீதியானது மானச அனுபவ
மாத்திரமாய்ப் புறக்கரணங்களால் அனுபவிக்க முடியாமையாலே, எத்தனையேனும் உயர ஏறியது தகர விழுகைக்குக்
காரணம் ஆமாறுபோலே மோஹத்துக்கு உறுப்பாய்த் தலைக்கட்டிற்று.
இப்படி இருக்கிற
தம் நிலையை, சர்வேசுவரனோடே கலந்து பிரிந்து நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி, தன் ஆற்றாமையாலே
மோஹித்துக் கிடக்க, இவள் நிலையை நினைத்த உறவினர்களும் மோஹித்து, ‘இது வேறு தெய்வங்களாலே
வந்ததோ!’ என்று வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையாரைக் கொண்டு புகுந்து பரிஹாரம் செய்யப்
புக, இவள் தன்மை அறிந்த தோழியானவள், ‘‘நீங்கள் செய்வனவாக
_____________________________________________________
1. திருவிருத்தம், 1.
2. பெரிய திருவந். 7.
3. பெரிய திருவந். 1.
4. ‘மேல் வீற்றிருந்தேழுலகு’
என்றது முதல் ‘அவள் பாசுரத்தாலே தம்
நிலையைப் பேசுகிறார்,’ என்றது முடிய, மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்கிறார். தகரவிழுதல் -
சிதறுண்டு விழுதல்; ‘மிகமிகக்
கீழே விழுதல்’ என்றபடி.
|