ஆற
ஆறாந்திருவாய்மொழி -
‘தீர்ப்பாரை’
முன்னுரை
ஈடு :
1மேல் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, அதனை அடுத்த இத்திருவாய்மொழி,
‘தீர்ப்பாரையாம் இனி’யாய் இருப்பதே! எம்பார், மேல் திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும்
அருளிச் செய்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ? மேல் திருவாய்மொழியில் அப்படிக் கரை கடந்ததான
பிரீதியோடே சென்றது; இத்திருவாய்மொழியில் இப்படி மயக்கத்தோடே தலைக்கட்டிற்று; இதற்கு
இருந்து அடைவுசொல்லுவேனோ? இதற்கு அசங்கதிரேவசங்கதி,’ என்று அருளிச்செய்வாராம்.
2‘ஸ்ரீ
பரதாழ்வான், ‘பெருமாளுடைய மகுடாபிஷேகத்திற்கு நம்மை அழைத்து வந்தது ஆகையால், அவரைத்
_____________________________________________________
1. ‘மேல் திருவாய்மொழி’
என்று தொடங்குவது, வியாக்கியாதாவின் ஈடுபாடு.
அதாவது, ‘மேல் திருவாய்மொழி எல்லையில்லாத
பிரீதியாய்,
இத்திருவாய்மொழி எல்லை இல்லாத துக்கமாயிருக்கிறதே!’ என்றபடி.
இதற்குச் சம்வாதம்
காட்டுகிறார், ‘எம்பார்’ என்று தொடங்கி.
‘மோருள்ளதனையும் சோறேயோ?’ என்றது, ஒருவன் நாழி
அரிசியைக்
கொண்டுவந்து ஓர் அம்மையார் கையிலே ‘எனக்கு இதனைச் சமைத்து
இடவேண்டும்’ என்று
கொடுக்க, அப்படியே அவரும் சமைத்து இலையைப்
படுத்திட, இவனும் அருகே ஒரு பாத்திரத்திலே மோரைக்
கொண்டுவந்து
வைத்திருந்து மோரை வார்த்துக் கொண்டு, ‘அம்மையாரே! மோர் விஞ்சிற்று,
சோறு
இடும்,‘ என்று ஒருகால் இருகால் இங்ஙனே சொல்லுகையாலே,
அம்மையார் அலுத்து, ‘நீ கொண்டுவந்த
மோர் தொலையாததாயிருந்தது;
மோருள்ளதனையும் சோறு இடுவேனோ?’ என்றாராம். ‘இதற்குக் கருத்து
யாது?’ என்ன, ‘மேலெல்லாம் கலவிக்கும் பிரிவுக்கும் ஒருபடி சங்கதி
சொல்லிக் கொண்டு போந்தோம்;
இதிலே வந்தவாறே மேடும்
பள்ளமுமாயிருந்தது; இது என்னாலே சொல்லலாயிருந்ததோ இதற்கு
அசங்கதிரேவ
சங்கதி?’ என்று அருளிச்செய்வாராம் என்றபடி. அடைவு -
சம்பந்தம், அசங்கதிரேவ சங்கதி : -
சங்கதியில்லாமையே சங்கதியாகச்
சொல்லுவது.
2. இந்தப்
பிரீதி அப்ரீதிகள் தாம் திருவிருத்தம் தொடங்கி, ‘முனியே
நான்முகனே’ என்ற திருவாய்மொழி
வரையிலும் தொடர்ந்து செல்லுகிறது
என்று திருவுள்ளம் பற்றி, நான்கு பிரபந்தங்களிலும் இவர்க்குண்டான
நிலை
வேறுபாடுகள், ஸ்ரீபரதாழ்வானுடைய நிலைகளோடு போலியாயிருக்கின்றன
என்கிறார்,
‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி. இங்கே, முதற்பத்து
அவதாரிகை, ‘திருமகள் கேள்வன் மூன்று’ காண்க.
|