பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
197

எல

எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் - போக்குவாள். 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

வீற்றிருக்கு மால்விண்ணில் மிக்க மயல்தன்னை
ஆற்றுதற்காத் தன்பெருமை யானதெல்லாம் - தோற்றவந்து
நன்றுகலக் கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்
சென்ற துயர்மாறன் தீர்ந்து.

(35)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘இத்திருவாய்மொழி’ என்று தொடங்கி.
  படியும் நடையும் - அனுபவமும் கைங்கரியமும். படி - ஜீவனம். நடை -
  தொழில்.