|
த
தீர்ப்பாரை யாம் இனி
எங்ஙனம் நாடுதும் - இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்; ‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே,
‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்; ‘என்னை?’
எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்துகொண்டிருக்கும்போது
‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே
அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, ‘இவள் 1ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே
அன்றோ இருப்பது? ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித்
தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்; அன்றிக்கே, ‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை
ஆராயாநிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
யாம் - ‘அன்னைமீர்?’
என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, 2‘யாம்’ என்கிறாள்; இதனால்,
தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி. 3அன்றிக்கே,
தாய்மார் மங்களாசாசனம் செய்து மீளா நிற்க, 4‘ஸ்ரீராமபிரானுடைய நண்பர் யாவரும்
மனம் கலங்கிச் சோகம் என்னும் சுமையால் அழுத்தப்பட்டவர்களாய்ப் படுக்கையிலிருந்து அப்பொழுது
எழுந்திருக்கவில்லை,’ என்று சொல்லப்படுகின்றவாறே அதுவும் மாட்டாதே கிடந்தார்களே அன்றோ தோழன்மார்?
ஆகையாலே,
_____________________________________________________
1. ‘இவள் மோஹித்தால்
எல்லாரும் மோஹிக்க வேண்டுமோ?’ என்ன, ‘ஊரும்
நாடும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
இது, திருவாய்.
6. 7 : 2.
2. ‘நாம்’ என்ற பன்மைப்
பெயரே, முன்னிலையாரை உளப்படுத்தும்; ஆதலால்,
‘நாம்’ என்ற பாடம் இருப்பின் பொருள் சிறக்கும்.
3. ஆயினும், தாய்மார்களைக்காட்டிலும்
தோழிமார்கட்கு வேறுபாடு உண்டு
என்பதனைப் பிரமாணத்தோடு காட்டுகிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
‘யந்மங்களம் ஸூபர்ணஸ்ய’ என்ற சுலோகத்தை நோக்கித் ‘தாய்மார்
மங்களாசாசனம் பண்ணி
மீளாநிற்க’ என்கிறார். தாய்மார் -கௌசல்யையார்
முதலானோர்.
4. ஸ்ரீராமா.
அயோத். 41 : ‘யாம்’ என்பது, முதற்பொருளில், உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை. இரண்டாவது
பொருளில், தனித் தன்மைப்பன்மை :
உயர்வுப்பொருளது.
|