பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
207

தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல். 1‘நோய் இன்னது என்று அறிந்த பின்பு’ என்பாள், ‘இனி’ என்கிறாள்; அன்றிக்கே, 2‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, ‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ 3‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது? 4‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’ என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள்,  ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

    5ஆக, தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே, ‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்; நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து, ஓர்ப்பால் - ‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயாநின்றீர்களே அன்றோ? உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி. இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால், மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காணவல்லள் ஆயிற்று. இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் - இத்தகைய சிறப்பினையுடைய நுதலையுடையவள்

_____________________________________________________

1. ‘நோய் இன்னது என்று அறிந்த பின்பு’ என்றது, ‘தேர்ப்பாகனார்க்கிவள்
  சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

2. திருநெடுந்தாண்டகம், 11.

3. ‘அவன் மருந்து’ என்னுமதற்குப் பிரமாணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘நச்சுமாமருந்தம்’ என்று தொடங்கி. இது, திருவாய். 3. 4 : 5.

4. ‘மருந்து’ என்பதற்கு, ஸஹஸ்ரநாமத்தினின்றும் மற்றும் ஒரு பிரமாணம்
  காட்டுகிறார், ‘ஆனந்தமாக இருப்பவர்’ என்று தொடங்கி.

5. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.