|
1இம
1இம்முகத்தையுடையவளுக்கு
வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ? 2‘கண்ணன், கோளிழை வாண்முகமாய்க்
கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ என்கிறபடியே, அம்முகத்தால் வரவேண்டாவோ? 3இவள்
நோய் என்றால் அவன் அடியாக வரவேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமாயிருக்குமோ?
ஸ்ரீ ராமவிரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? 4இவளை இப்படிப் படுத்துவது ஒரு
விஷயமாக வேண்டாவோ? 5அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு
முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப்
பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே 6முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி
ஆயிற்று இருக்கிறது.
பரிஹாரம் இல்லாதபடி
மறுபாடுருவக் கொண்டநோய் ஆதலின், ‘உற்ற நோய்’
என்கிறாள். இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா; 7‘கைக்கூலி கொடுத்துக்கொள்ள வேண்டும்
நோய்,’ என்பாள், ‘நல்நோய்’
என்கிறாள். 8இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள்
_____________________________________________________
1. ‘இ’ என்னும் சுட்டினை
முகத்திற்கு அடைமொழியாக்கி அருளிச்செய்கிறார்,
‘இம்முகத்தையுடையவளுக்கு’ என்று தொடங்கி.
2. ‘பின்னை எம்முகத்தாலே
வரவேண்டும்?’ என்ன, ‘கண்ணன்’ என்று
தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, திருவாய்.
7. 7 : 8.
3. இகரச்சுட்டினை
ஒண்மைக்கு அடையாக்கி அருளிச்செய்கிறார், ‘இவள்
நோய்’ என்று தொடங்கி. சாதுர்த்திகம் -
ஒரு நோய். முதற்பத்துக் குறிப்புக்
காண்க. பக். 157.
4. தேர்ப்பாகனார்க்கு
என்றதைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்,
‘அவளை’ என்று தொடங்கி.
5. ‘ஒண்ணுதல்’ என்பதற்கு,
‘இயல்பாக அமைந்த அழகையுடையவள்’ என்று
மேலே பொருள் அருளிச்செய்து, பகவத் அனுபவத்தால் வந்த
அழகையுடையவள் என்று வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அம்பு
பட்ட’ என்று தொடங்கி.
6. ‘அவன், அகத்தில்
இருப்பதனாலே மோஹ தசையிலும் ஒளி போகவில்லை’
என்பது கருத்து.
7. ‘கைக்கூலி கொடுத்து’
என்றது, ‘ஸ்வாபதேசத்திலே சாத நாநுஷ்டானத்தைச்
செய்து’ என்றபடி.
8. ‘இந்நோய்’
என்றது, ஈண்டு, பத்தியினை.
|