பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
210

New Page 1

‘தேறினோம்’ என்கிறாள். 1‘இதர விஷயங்களிலே ஈடுபாடு ஆகாது’ என்கிற தெளிவே அன்றோ இருடிகளுக்கு உள்ளது? பகவானிடத்தில் ஈடுபட்ட காரணத்தால் வந்த கலக்கமே அன்றோ இது?

    ‘ஆகில், அது சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் : போர்ப் பாகு தான் செய்து - போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து; என்றது, ‘இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று, போர்க்களத்தில் வந்தவாறே, 2 ‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான அந்தக் கண்ணபிரான் தருமபுத்திரனுக்கு மந்திரியாயும் இரட்சகனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, அவர்கள் பறித்துக்கொண்ட பரிகரமெல்லாம் தானேயாய் நின்றானாயிற்று,’ என்றபடி. பாகு - நிர்வாஹகர் செய்யும் தொழில். 3அன்றிக்கே, ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் செய்து’ என்னுதல்; என்றது, ‘தனது ஆசன பலத்தாலே எல்லாவற்றையும் நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’ என்றபடி. ‘தான்’ என்று மேன்மை சொல்லிற்று. 4‘இவள் மோஹிக்கிறது அவனுடைய எளிமைக் குணத்துக்கே அன்றோ?’ என்றது, ‘எளியவனுடைய எளிமைக் குணத்துக்கு அகப்படுமவள் அன்று இவள்; அம்மேன்மையுடையவன் தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்?’ என்றபடி.

    அன்று தான் செய்து ஐவரை வெல்வித்த - அவர்கள் நூற்றுவராய் தீயோர் அடைய அங்கே திரண்டு, இவர்கள் தாம் ஐவராய் வெறுவியராய் நின்ற அன்று, தான் கையும்

_____________________________________________________

1. ‘தெளிவு அரிதாகில், கலக்கம் தியாஜ்யம் அன்றோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இதர விஷயங்களிலே’ என்று தொடங்கி. என்றது,
  ‘விஷயதோஷ தர்சனமே பிரதானம் இருடிகளுக்கு; பகவத் விஷய
  வைலக்ஷண்ய ஞானமே பிரதானம் ஆழ்வார்களுக்கு,’ என்றபடி.

2. பாரதம்.

3. ‘ஆளிட்டுச் செய்யாதே தானே செய்து’ என்று ஓர் அர்த்தம் அருளிச்செய்து,
  ‘தான்’ என்பதற்குச் ‘சர்வாதிகனான தான்’ என்று வேறும் ஓர் அர்த்தம்
  அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. ‘கை தொடனாம்’
  என்றது, ‘கையாலே தொட்டுச் செய்கிற சகாயபூதனாய்’ என்றபடி.

4. ‘இவள் மோஹிக்கிறது அவனுடைய எளிமைக்குணத்துக்காயிருக்க,
  மேன்மையைச் சொல்லுகிறது எற்றிற்கு?’ என்ன அதற்கு, விடை
  அருளிச்செய்கிறார், ‘இவள் மோஹிக்கிறது’ என்று தொடங்கி. அவனுடைய -
  பரனானவனுடைய.