பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
211

அண

அணியும் வகுத்து, படை பொருத்தி, 1சாரதியாய் நின்று, குதிரைகள் இளைத்தவிடத்து வாருணாஸ்திரங்கள் விடலாமிடங்கள் காட்டி விடுவித்து, அங்கே குதிரைகளை விட்டு நீரூட்டிப் பூட்டி வென்றான்,’ என்னுமிடம். அருச்சுனன் மேலேயாக வேண்டும் செயல்கள் முழுதும் தானே செய்தானே அன்றோ? துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும் அரிதுகாணும் பாண்டவர்களை வெல்வித்தது; ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.

    ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘துரியோதனன் முதலியோர்கள் செருக்குக் கொண்டவர்கள் ஆகையாலே தோற்பிக்கை அரிது; 2இவளைப் பெண்மைக்குரிய அபிமானத்தாலே தோற்பிக்கை அரிது; அப்படியே, 3‘ஏ கிருஷ்ண! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நாங்கள் விரும்பவில்லை; இராச்சியத்தினாலே என்ன பயன்? போகங்களினால் என்ன பயன்? உயிர் வாழ்ந்திருப்பதனால் என்ன பயன்?’ என்ற பாண்டவர்களை வெல்வித்தலும் அரிது என்றபடி. மாயம் போர் - ஆச்சரியமான போர்; அன்றிக்கே, ‘வஞ்சனையுடைய போர்’ என்னுதல். 4பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவை இத்தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது தொடக்கமானது அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.

    தேர்ப்பாகனார்க்கு - அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச்செய்வது தன்னையாம்படி, 5உடம்புக்கு ஈடு இடாதே வெறுங்கையோடே தேர்த்தட்டிலே முன்னே

_____________________________________________________

1. கையும் அணியும் வகுத்து - வியூக விபாகம் செய்து.

2. ‘இவளைப் பெண்மைக்குரிய அபிமானத்தாலே தோற்பிக்கை அரிது,’ என்றது,
  ‘சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே’ என்றதனால் இவள் தோல்வியும்
  சித்தமேயன்றோ?

3. ஸ்ரீ கீதை. 1 : 32.

4. இவற்றை வில்லிபாரதம் மூன்றாம் போர், பதின்மூன்றாம் போர்,
  பதினான்காம் போர்ச்சருக்கங்களால் உணரலாகும். இத்தலை - பாண்டவர்கள்
  பக்கலில்.

5. உடம்புக்கு ஈடு இடாதே - உடம்புக்குச் சட்டை இடாதே. ஈடு - சட்டை.