பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
213

திசைப்பு இன்றி யே‘சக்
    கரம்’என்று இவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில், நன்றே
    இல்பெறும்; இது காண்மினே.

    பொ-ரை : ‘அறிவு கெட்டு மயங்குவதே! இவளுடைய நோயாகிய இது, மிகப்பெரிய தெய்வம் காரணமாய் வந்தது; ஆதலால், நீங்கள் பொருத்தமில்லாமல் அணங்கு ஆடுகின்ற புன்சிறு தெய்வங்கள் காரணமாய் வந்ததன்று; மயக்கமில்லாமல் ‘சங்கம் சக்கரம்’ என்று இவள் கேட்கும்படியாக நீங்கள் சொல்வீர்களாகில் நலமேயாம்; இவளும் இச்சரீரத்தையே இடமாகப் பெறுவாள்; இதனை நீங்களே காணுங்கோள்,’ என்கிறாள்.

    வி-கு : திசைத்தல் - திகைத்தல்; அறிவு மயங்குதல். இசைப்பு -பொருத்தம். அணங்காடுதல் - தெய்வம் ஏறியாடுதல். இல் - சரீரம்; உயிருக்கு வீடாய் இருப்பது.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘புன்சிறு தெய்வங்கட்குச் செய்யும் சாந்திகளால் இந்நோய் போக்குகை அரிது; பகவானைப்பற்றிப் பேசில் இவளைப் பெறலாம்’ என்கிறாள்.

    2திசைக்கின்றதே இவள் நோய் - 3‘இவள் அவன் குணம் காரணமாக அறிவு கெடாநின்றாள்; நீங்கள் இவள் நோய் காரணமாக அறிவு கெடாநின்றீர்கள். 4‘இவள் நோய்க்குக் காரணம் அவன் அடியாக வந்தது,’ என்று

_____________________________________________________

1. ‘நீர் அணங்காடும் இளந்தெய்வம் அன்றிது,’ என்றதனால் பலித்த பொருளை
  அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘சங்கு சக்கரம் என்றிவள் கேட்க நீர்
  இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும்,’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திசைத்தல் - திகைத்தல்; அறிவு மயங்குதல்.
  ‘திசைத்தது மில்லை எனக்குவந்து தீயோர்
  இசைத்தது மில்லைமுன் ஈந்தஇவ் வரங்கள்
  குசைப்பரி யோய்!தரின் இன்று கொள்வன்’

  என்பது கம்பராமாயணம்.

3. மேல் பாசுரத்தில் ‘திசைக்கின்றதே’ என்று வைத்து, இங்கும் ‘திசைக்கின்றதே
  இவள் நோய்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘இவள் அவன்’
  என்று தொடங்கி. ‘தேர்ப்பாகனார்க்கு -என்றதனை நோக்கி, ‘அவன்
  குணநிமித்தமாக’ என்கிறாள். குணம், சௌலப்ய குணம்.

4. ‘பெருந்தெய்வம்’ என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இவள் நோய்க்கு’ என்று தொடங்கி.