|
நலத
நலத்தைக் கேளாதொழிய
வேண்டுமோ? ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும்
சொன்ன வார்த்தை நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? 1திருமாலைப்
பாடக் கேட்டு, ‘வளர்த்ததனால் பயன் பெற்றேன்; வருக’ என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினவளும்
உங்களிலே ஒருத்தி அன்றோ? 2அது கிடக்க : ‘புத்திரர்களே!’ என்று அல்லவா
சொன்னார் என்றாரும் இல்லையோ? யாரேனும் சொல்லிலும் வார்த்தை நன்றாகில் கைக்கொள்ள வேண்டாவோ?
இக்கட்டுவிச்சி சொற்கொண்டு - ‘பரிஹாரம் சொல்லுகிற இவள் தன்மை கண்டீர்களே அன்றோ? இவள்
வார்த்தையைக் கேட்டீர்களே அன்றோ? இதனையோ ஆதரிப்பது! நான் சொல்லுகிற வார்த்தையையே இவள்
சொன்னாலும் கேட்கக் கடவதோ? 3‘காணிலும் உருப்பொலார்’ என்கிறபடியே அன்றோ
இருப்பது?’ என்பாள், ‘இக்கட்டுவிச்சி’ என்கிறாள். ‘இவள் சொன்ன வார்த்தையை யான்
கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள்,
‘இச்சொல்’ என்கிறாள். ‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.
_____________________________________________________
1. ‘வயிற்றில் பிறந்தவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பேர்
உளரோ?’ என்ன
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘திருமாலை’ என்று தொடங்கி. இது,
திருநெடுந். 14.
‘விளக்கொளியை மரகதத்தைத்
திருத்தண் காவில்
வெஃகாவில் திருமாலைப்
பாடக் கேட்டு,
‘வளர்த்ததனால் பயன்பெற்றேன்;
வருக’ என்று
மடக்கிளியைக் கைகூப்பி
வணங்கி னாளே.’
என்பது அப்பாசுரப் பகுதி.
2. ‘அது கிடக்க’
என்றது, ‘உங்கள் வார்த்தையே அன்றிக்கே, முனிவர்கள்
கோஷ்டியிலும் இப்படியேயன்றோ?’ என்றபடி.
என்றது, அவ்வளவேயன்றி,
ஞானோபதேசம் செய்தாரும் இலரோ?’ என்கிறாள் என்றவாறு. ‘பிரமன்
பிதிரர்
முதலானோர்களைப் பார்த்து, ‘மூடராய்ப் போங்கோள்!’ என்று சபிக்க,
அவர்கள் சுக்கிரன் பக்கலிலே
அத்தியயனம் பண்ண, அவர்களைப் பார்த்துப்
‘பிள்ளைகாள்! வாரிகோள்’ என்றானேயன்றோ சுக்கிரன்?’
என்றபடி.
3. ‘காணிலும்
உருப்பொலார் செவிக்கி னாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர
மிடுக்கி லாத தேவரை
ஆணமென் றடைந்து வாழும்
ஆதர்காள்! எம் ஆதிபால்
பேணி நும்பி றப்பெனும்
பிணக்கு அறுக்க கிற்றிரே’
என்பது திருச்சந்தவிருத்தம்,
69.
|