|
ந
நீர் - 1‘பேய்
முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய
நீங்கள், 2நாஸ்திகரான பௌத்தர் ஜைநர் முதலான மதத்தினர்களும் ‘பிற உயிரை
வருத்தல் ஆகாது’ என்பார்களே அன்றோ? அவ்வழியாலே கைக்கொள்ளுமவர்களோ நாம்? ‘எந்த உயிரையும்
கொல்லுதல் கூடாது,’ என்ற விதியைக் கைக்கொள்ளுதல் போன்று 3‘வைதஹிம்சையும்’ கைக்கொள்ள
வேண்டாவோ? 4‘ஆத்தும தத்துவத்தையறிந்த பிரஹ்ம ஞானிகள்’ என்னப்படுமவர்களன்றோ
உங்களுக்கு உபதேசிக்கத் தக்கவர்கள்?
எதுவானும் செய்து - யாதேனும்
பொருத்தம் இல்லாத காரியத்தைச் செய்து. உங்கள் ஆசாரத்தோடு சேர்ந்திருக்கப் பெறில்,
5அதுவும் ஆகுமே அன்றோ? 6‘செய்யாதன செய்யோம்’ என்றும்,
‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்? அங்கு ஓர் இறைச்சியும்
கள்ளும் தூவேன்மின் - தாழ்ந்த பொருள்களைக் கொண்டு வைஷ்ணவத் திருமாளிகையைத் தூஷியாதே
கொள்ளுங்கோள்.
‘அங்கு’
என்று முகத்தை மாற
_____________________________________________________
1. முதல் திருவந். 11.
2. ‘இக்கட்டுவிச்சியின்
சொல்லானது ஹிதவசனமாயிருந்தால் அதனைக்
கேட்கலாகாதோ?’ என்ன, ‘நாஸ்திகரான’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். அவ்வழியாலே - அவர்கள் உபதேசிக்கும் வழியாலே.
3. ‘வைதஹிம்சை’ என்றது, ‘விதிக்கப்பட்ட
ஹிம்சை’ என்றபடி. அதாவது,
‘யாகத்தில் பசு ஹிம்சை விதிக்கப்பட்டிருக்கிறது; அதனைக் கைக்கொள்ள
வேண்டாவோ?’ என்றபடி. ‘ஜைனர்கள் முதலானோருடைய உபதேசத்தைக்
கேட்டால் அதனை விடவேண்டி
வருமேயன்றோ?’ என்க.
4. ‘ஆயின், நமக்கு உபதேசிக்கத்
தக்கவர்கள் யார்தாம்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘ஆத்தும தத்துவத்தை’ என்று
தொடங்கி. இது,
ஸ்ரீ கீதை. 4. 33.
5. ‘அதுவும் ஆகுமேயன்றோ?’ என்றது,
‘அவள் கூறியது கேட்கவும்
ஆகுமேயன்றோ?’ என்றபடி.
6. ‘பொருத்தமானவைகளாகச்
செய்யக் கூடியவை யாவை?’ என், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘செய்யாதன’ என்று தொடங்கி.
இது, திருப்பாவை.
இந்தப் பிரமாணத்தால், ‘நம் முதலிகளுடைய அநநுஷ்டாநமும்
அநுஷ்டானமும்
தியாஜ்ய உபாதேயங்களாம்’ என்றபடியாயிற்று.
|