பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
222

New Page 1

வைத்துச் சொல்லுகிறாள். ‘ஆகில், தவிருகிறோம்; பரிஹாரத்தைச் சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :

    மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் - 1‘விரை மட்டு அலர் தண்துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது? திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடையனாய், அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும் உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். 2‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது? ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க. 3‘கெண்டை ஒண்கண்ணும் துயிலும்’ என்றார் திருமங்கை மன்னனும். அதுவே -அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே.

_____________________________________________________

1. திருவாய்மொழி, 2. 4: 9.

2. ‘ஏத்தினால்’ என்னாதே, ‘வாழ்த்தினால்’ என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘உன்  சேவடி’ என்று தொடங்கி. இது,
  திருப்பல்லாண்டு, 1.

3. ‘தன் ஆற்றாமை தீருகை மாத்திரமே பிரயோஜனமாகையன்றிக்கே,
  அத்தலைக்கு மங்களாசாசனம் செய்கையும் அவசிய அபேக்ஷிதம்’ என்கைக்கு
  மற்றும் ஓர் உதாரணம் காட்டுகிறார், ‘கெண்டை ஒண் கண்ணும்’ என்று
  தொடங்கி. இது, பெரிய திருமொழி, 11. 1 : 9. இதற்கு வியாக்கியாதா
  அருளிச்செய்த பொருளைத் தருகிறேன் : ‘கெண்டை ஒண்கண்ணும் துயிலும்
  - உறக்கத்தால் அல்லது செல்லாதபடியாய் முக்தமாய்ச் சுகுமாரமான கண்ணும்
  உறங்கும். என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் - அதாவது, கலப்பதற்கு
  முன்பு போலேயாம், கலக்கையாகிறது, ஆற்றாமைக்கு அடி இடுகிறதிறே. ஒரு
  விஷயத்தில் வாசி அறியாதார் நிரபேக்ஷரிறே. ‘கண்ணுறங்குவதும் நிறம்
  பழையபடியேயாவதும் என் செய்தால்?’ என்னில், மிக்க சீர் இத்யாதி -
  அநந்யப் பிரயோஜனரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இட்ட திருத்துழாயில்
  பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்.  இப்படிச் சீயர்
  அருளிச்செய்தவாறே ‘துளவின் வாசமே’ என்ன அமையாதோ? ‘மிக்க சீர்த்
  தொண்டர்’
என்கிற விசேஷணத்திற்குக் கருத்து என்?’ என்று நான்
  கேட்டேன்; இவள்தான் நோவுபடுகிறது ‘அத்தலைக்குப் பரிவாரில்லை’
  என்றாயிற்று; ‘அங்கே அநந்யப் பிரயோஜனர் பரிமாறாநின்றார்கள்’
  என்றவாறே உறங்காத கண்ணும் உறங்கும்; பழைய நிறமும் வருங்காண்,’
  என்று அருளிச்செய்தார் என்பது.