|
New Page 1
கொண்டு என்றது, 1‘வேறாக,
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே, அவர்கள்
காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? தம்மைப் போன்றவர்களாக
நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ? ஆன பின்னர்,
அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
2இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள்
உளரே அன்றோ? 3‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’
என்கிறபடியே, அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது? விண்ணோர்
பெருமான் திருப்பாதம் பணிந்து -அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய்
இது தீர்த்துக்கொள்ளாது - நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச்
செய்யாமல்.
போய் - நம்முடைய
நிலைக்கு மிக்க தூரமாய் உரியது அல்லாதது ஒன்றிலே கைகழியப் போய். ஏதம் பறைந்து -
_____________________________________________________
1. மேல் திருப்பாசுரத்திலே
‘வேதம் வல்லார்களை வணங்கீர்கள்’ என்று
வைத்து, இங்கு, ‘அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு’
என்கிறது என்?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘வேறாக’ என்று தொடங்கி. இது, நான்முகன் திருவந். 18. இந்த நிஷ்டை
உண்டானால் விரைவிலே
பயன் பெறலாம்; இது உண்டாவது அருமை;
‘புருஷகாரமாக வாகிலும் பற்றுங்கோள்’ என்பது திருவுள்ளம்.
2. ‘வேதம் வல்லார்களைக்
கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று
அருளிச்செய்வதனால்
நித்தியசூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை
விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி. இவர்கள் இருவரும்
புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ
அவஸ்தையிலும், முத்த
அவஸ்தையிலும் ஆம்.
3.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அந்த அமாநவன்’
என்று தொடங்கி. இது,
சாந்தோக்ய
உபநிட.
4 : 15. அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும்
உபலக்ஷணம். இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை
எதிர்கொள்ள’ என்ற
தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது,
திருவாய்.
10. 9 : 8.
|