பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
237

1உங

1உங்களுக்குக் குற்றமானவற்றை நீங்கள் சொல்லி. அல்ல செய்து - செய்யக் கூடியது அல்லாததைச் செய்து. கள் ஊடு கலாய்த் தூஉய் - அசுத்தமான பொருள்களைக் கொண்டு வீடு முழுதும் கலந்து தெளித்து. 2தூய்மை இல்லாத பொருள்களைத் தீண்டுதலைப் போன்றது ஒன்றே அன்றோ, வேறு தெய்வங்களினுடைய சம்பந்தமும்? 3‘விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது’ என்கையாலே, அவனைக் கொண்டு பெறுதற்குப் பாராமல், அவனுக்குப் புறம்புமாய் யான் எனது என்னும் செருக்குகளை உட்கொண்டதான கிரியா கலாபங்களாலே பெறுதற்குப் பார்க்கையும் அதனைப் போன்றது ஒன்றே ஆயிற்று என்பதனைத் தெரிவித்தபடி. 4அற மேலாய் இருக்கும் மருந்தே அன்றோ இவள் சொல்லிற்று? அதனை அன்றோ இவர்கள் விரும்புதல் இன்றி நிற்கிறது? கீதம் முழவு இட்டு -தண்ணிதான கீதத்தோடே கூடின முரசுகளை ஒலிப்பித்து. நீர் அணங்கு ஆடுதல் - பகவானுடைய குணங்களை அனுபவிக்கின்ற அனுபவத்தாலே 5‘உண்டு களித்தேற்கு உம்பர் என்குறை?’ என்னக்கூடிய நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுவது. கீழ்மையே - ‘சாலத் தண்ணிது. உங்கள் அளவில் போகுமது அன்று; உங்கள் வழிக்கும் கொத்தை’ என்றபடி. ஊடு -உள்ளே.      

(8)

_____________________________________________________

1. ‘உங்களுக்குக் குற்றமானவற்றை நீங்கள் சொல்லி’ என்றது, ‘சொரூபத்திற்குக்
  குற்றமுண்டாகுமாறு மற்றைத்தேவர்களைக் குறிக்கின்ற சொற்களைச் சொல்லி’
  என்றபடி.

2. ‘ஆழ்வார் பக்கலிலே அசுத்தமான பொருள்கள் வரக் காரணம் யாது?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தூய்மை இல்லாத’ என்று
  தொடங்கி.

3. ‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் தியாஜ்யம்,’ என்று சொல்லுகின்ற
  இவ்விடத்திலே, ‘வேறு உபாயங்களின் சம்பந்தமும் தியாஜ்யம்’ என்று கூறத்
  திருவுள்ளம் பற்றிச் சப்த நிர்வாஹம் காட்டுகிறார், ‘விண்ணோர் பெருமான்’
  என்று தொடங்கி. கிரியா கலாபம் - கிரியைகளின் கூட்டம். கிரியை -
  செய்கை; காரியம்.

4. ‘விண்ணோர் பெருமான்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அற
  மேலாய்’ என்று தொடங்கி.

5. ‘உண்டு களித்தேற் கும்பர் என்குறை? மேலைத்
  தொண்டு களித்துஅந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்’

  என்பது திருவாய்மொழி, 10. 8 : 7.