|
ஒ
ஒரு தெய்வம் உண்டு, அது
காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு. 1ஸஹபத்நியா -
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர்
புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி, பெரியபெருமாள்தாம் உத்தேசியமாகப்
புக்கு அறியேன். இயம்க்ஷமாச -இராவணன் பலவாறாகப்
பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் பொறுத்திருந்ததும்
‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய். பூமௌசஸய்யா - ‘இத்தரைக்கிடை கிடந்ததும்
2தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய். நியமஸ்தர்மமே - ‘காப்பாற்றும் தர்மம் அவர்
தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, 3‘பத்துத்
தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய
ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை
நினைத்து’ என்றபடி. பதிவிரதாத்வம் - 4‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல்
எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
_____________________________________________________
1. ‘ஆயின், அயோத்தியா
காண்டத்தில் ஆறாவது சர்க்கத்தில் முதல்
சுலோகத்தில் ‘குல தெய்வமான நம்பெருமாளை வணங்கினாள்’
என்று
கூறப்பட்டுள்ளதே?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஸஹபத்நியா’ என்றது முதல்
‘புக்கறியேன்’ என்றது முடிய. எடுத்துக்
கைநீட்டுதல் - கைங்கரியம் செய்தல். இங்குத் தமிழ்
மரபையும் ஒருபடி
கடந்து செல்லுகிறார் வியாக்கியாதா. ‘தெய்வமஞ்சல்’ (தொல். பொருள்.
மெய்ப்.) என்ற சூத்திரம் நினைவுகூர்தல் தகும்.
2. ஸ்ரீராமா. சுந். 38
: 12. இது, பெருமாளிடம் தெரிவிக்குமாறு திருவடியிடம்
பிராட்டி கூறியது.
3. இது, ஸ்ரீ ராமா.
சுந். 22 : 20. இது, இராவணனைப் பார்த்துப் பிராட்டி
கூறியது. இங்கே,
‘அல்லன்
மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த
உலகங்கள் யாவும்என்
சொல்லி னாற்சுடு
வேன்!அது தூயவன்
வில்லி னாற்றற்கு
மாசுஎன்று வீசினேன்.’
என்ற கம்ப நாடர் திருவாக்கு
ஒப்பு நோக்கலாகும்.
4.
ஸ்ரீ ராமா. யுத்.
18 : 33.
|