|
New Page 1
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை
உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் - தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது
போலே?’ என்னில், மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ - 1‘நான் என்னை மனிதனாகவே
நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த
காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது, ‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’
என்னில், மம இதம் - ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள்
பிராட்டி.
நும் இச்சை
சொல்லி - உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும்
இவளைப் பார்த்தாலும் வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது
உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி. நும் தோள் குலைக்கப்படும்
அன்னைமீர் - 2துர்விருத்தர் செய்வதை
விருத்தவான்கள் செய்வர்களோ? 3‘தோள்
அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது? ஆதலால், 4நீங்கள்
இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,
மன்னப்படு மறைவாணனை - நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே
பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது,
பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால்
_____________________________________________________
1. ஸ்ரீ ராமா.
யுத். 120 : 11.
2. ‘துர்விருத்தர்
செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?’ என்றதற்கு,
‘பகவத் சம்பந்தமில்லாதார் செய்வதனைப்
பகவத் சம்பந்தமுடையவர்கள்
செய்வர்களோ?’ என்பது கருத்து.
3. முதல் திருவந்.
63.
4.
‘நீங்கள்’ என்றது, ‘அவனுக்கே அடிமைப்பட்டிருக்கிற நீங்கள்’ என்றபடி.
|