| New Page 1 
சொல்லப்படுகின்றவனை’ 
என்னுதல். ஆக, 1‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் 
பார்ப்பது? வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி. வண் 
துவராபதி மன்னனை - கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து 
அவதரித்தவனை. 2‘நீரிலே புக்கு 
அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, 
தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் 
செய்யப் பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி 
மன்னனை ஏத்துமின்’ என்கிறாள். ஏத்துமின் 
- வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள். 3‘சீர் பரவாது, உண்ண வாய்தான் 
உறுமோ ஒன்று?’ என்று அன்றோ நீங்கள் சொல்லுவது? ஏத்துதலும் தொழுது ஆடும் - நீங்கள் செய்யத்தகும் 
காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று; 4‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் 
ஆகிறான்,’ என்கிறபடியே, ஏத்தின உடனேயே தெளிவையுடையவளாய்த் தொழுது ஆடுவாள். 5உணர்த்தி 
உண்டானால் செய்வது அது போலேகாணும். என்றது, ‘தரித்து ஆடுதற்குத் தக்க ஆற்றலையுடையவளும் ஆவாள்,’ 
என்றபடி.  
(10) 
398 
  
    
தொழுதுஆடித் தூமணி 
வண்ணனுக்குஆட்செய்து 
நோய்தீர்ந்த
 வழுவாத தொல்புகழ் 
வண்குரு
 கூர்ச்சட கோபன்சொல்
 
_________________________________________________ 
1. ஆகமம் - சைவாகமம். 
2. ‘வண்துவராபதி மன்னனை 
ஏத்துமின்’ என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார், 
‘நீரிலே புக்கு’ என்று தொடங்கி.
 
3. பெரிய திருவந். 
52. இது, ‘வாய் படைத்த பிரயோஜனம் அவனை ஏத்துதல்’என்றதற்குப் பிரமாணம்.
 
4. தைத்திரீய உபநிடதம். 
5. ‘ ‘தொழுது’ என்பது, தெளிவையுடையளாதலைக் 
காட்டுமோ?’ எனின்,அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உணர்த்தியுண்டானால்’ என்று தொடங்கி.
 ‘அது’ என்றது, தொழுது ஆடுதலை.
 |