பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
246

New Page 1

பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இதுதானே அமைந்தது இவள் உணருகைக்கு. 1பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க்காணும் இருப்பது.

    வழுவாத தொல்புகழ் - வழுவாத தொல் புகழாவது, மயங்கிக் கிடக்கிற நிலையிலும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் அவ்வப்பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஏதுவாய், அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும் பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ். ஒருவன் வைஷ்ணவனாகையாவது, 2இது. ‘சர்வேசுவரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, வேறு தெய்வங்களின் சம்பந்தமும் பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமேயானால், வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லைகண்டீர். 3முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும்

_________________________________________________

1. ‘பகவத் பிரபாவம் உட்புகுந்த தோழிக்கும் அறிய ஒண்ணாதோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பகவானுடைய பிரபாவம்’ என்று
  தொடங்கி. ‘உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத்
  தொருத்தன்’ என்பது திருக்கோவையார்.

2. ‘இது’ என்றது, மேலே கூறியதனைச் சுட்டுகிறது. ‘‘இது’ என்கிற நிர்ப்பந்தம்
  யாது?’ என்ன, இதனை, வியதிரேகத்தால் சாதிக்கிறார், ‘சர்வேசுவரன்’ என்று
  தொடங்கி. ஒருவன் பக்கலிலே - ஆசாரியன் பக்கலிலே. ‘ஒரு வார்த்தை’
  என்றது, துவயத்தின் அர்த்தத்தையாதல், சரம ஸ்லோகத்தின்
  அர்த்தத்தையாதல்.

3. பிரபந்நனுக்கு வேறு தெய்வங்களின் சம்பந்தத்தையும் பாகவதர்கள்
  அல்லாதாருடைய சம்பந்தத்தையும் நீக்காத அன்று வைஷ்ணவத்வம் இல்லை’
  என்றார். இனி, பிரபந்நனுக்கு, தேவதாந்தர சம்பந்தம்
  தியாஜ்யமானாற்போன்று, வேறு உபாயங்களின் சம்பந்தத்தையும் நீக்க
  வேண்டும் என்று கூறத் திருவுள்ளம் பற்றி, ‘இப்படியானால், எல்லாக்
  கர்மங்களுக்கும் யோக்கியதா பாதகமான (வேறு சத்கர்மங்களைச்
  செய்வதற்குத் தகுதியை உண்டாக்கக்கூடிய கர்மங்கள்’. என்றது,
  சந்தியாவந்தனம் முதலிய கர்மங்கள்) நித்திய நைமித்தியங்களும் திவ்ய
  தேசவாசம் முதலானவைகளும் தியாஜ்யமாகாவோ?’ என்ற சங்கையைத்
  திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘முன் பகுதியை’
  என்று தொடங்கி. ‘முன்பகுதி’ என்றது, துவயம் அல்லது,
  சரமஸ்லோகத்தினுடைய முதல் அடியினை. ‘ஸ்ரீமந் நாராயணனுடைய
  திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது துவயத்தின் முற்பகுதியின்
  பொருள். ‘எல்லாத் தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப்
  பற்று,’ என்பது சரமஸ்லோகத்தின் முற்பகுதியின் பொருள். இதனை
  நோக்கியே, ‘இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய்
  இருக்கும்’ என்கிறார்.

  ‘கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர்
  குடிதுறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
  நெடியானே! அடியேன்நான் முயற்சி யின்றி
  நின்னருளே பார்த்திருப்பன் நீச னேனே.’

  என்ற திவ்விய கவியின் திருவாக்கு இங்கு அநுசந்திக்கத் தகும்.