த
தகுதி இல்லாதபடியாய்
இருக்கும்; 1பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப்போலே கண்ணுறங்கவும்
விரகு இல்லையாய் இருக்கும்; 2‘கழிவது
ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றே அன்றோ இருப்பது? 3
‘சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும் அதற்கு விரோதியானவற்றைக்
காற்கடைக்கொள்ளுமதுவும் இல்லையாகில்,
_________________________________________________
1. ‘பிற்பகுதியை நினைத்தால்
இளைய பெருமாளைப் போன்று கண்ணுறங்கவும்
விரகு இல்லையாய் இருக்கும்.’ என்றது, ‘ஸ்ரீமந் நாராயணனுக்கே
எல்லா
அடிமைகளையும் செய்யப் பெறுவேனாக வேணும்,’ என்ற துவயத்தின்
பிற்பகுதியின் பொருளை நினைத்தால்
எப்பொழுதும் இளைய பெருமாளைப்
போன்று அடிமை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றபடி.
2. மேலதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘கழிவதோர்’ என்று தொடங்கி. இது,
திருவிருத்தம், 97. ‘ஆக, இதுகாறும்
என் சொல்லியவாறோ?’ எனின்,
சாதனமாக நினைத்தால் எல்லாக் கர்மங்களையும் விடவேணும்; சாத்தியமாக
நினைத்தால் எல்லாம் செய்யவேணும்,’ என்ற உண்மையைக் கூறியவாறு.
‘கர்மம் கைங்கரியத்திலே
புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ
சூக்தி.
3. ‘வேறு தெய்வங்களின்
சம்பந்தமும், அத்தெய்வங்களின் அடியார்களுடைய
சம்பந்தமும் வைஷ்ணவனுக்குக் கூடா,’ என்று கூறிய
இது, ஆநுகூல்ய
சங்கற்பம் முதலிய நற்குணங்களுக்கும் உபலக்ஷணம் என்று கொண்டு,
‘இவையெல்லாம் வேண்டுமோ?
ஒரே தடவை செய்யக்கூடியதான பிரபத்தி
மாத்திரமே போதியதாகாதோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘சொரூபம் இது’ என்று தொடங்கி. ‘இது’ என்றது, மேலே கூறிய
‘அவனாலேயே
காக்கப்படுகின்ற தன்மையை’ச் சுட்டுகிறது. ‘ஞானம்
பிறந்ததில்லையாம்’ என்றது, ‘பயன் இல்லாமையாலே,
பிறந்த ஞானம்
அஞ்ஞானத்திற்குச் சமம்,’ என்றபடி.
|