பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
248

ஞானம் பிறந்தது இல்லையாமித்தனையே அன்றோ? 1இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை. 2‘திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்றும், 3‘திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்றும், 4‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’ என்றும், 5‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றும் அன்றோ இவர்கள்படி? 6பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும், நித்திய கைங்கரியம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

    வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் - இவ்வாத்துமாவுக்கு அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும். ‘வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹசுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,

_________________________________________________

1. வேறு தெய்வங்களினுடைய சம்பந்தமும், பாகவதர்கள் அல்லாதாருடைய
  சம்பந்தமும் கொள்ளத் தக்கவையல்ல என்பதற்குப் பிரமாணம் காட்டுவதற்குத்
  திருவுள்ளம் பற்றி, அதற்கு அவதாரிகை இடுகிறார், ‘இஃது இல்லையாகில்’
  என்று தொடங்கி. என்றது, ‘அநந்யார்ஹசேஷத்வமே சொரூபம்’ என்று
  அறிந்து விலக்க வேண்டியவற்றை விலக்காத போது ஞானம் பிறந்ததில்லை;
  ஆழ்வார்கள் போன வழியில் சேர்ந்தவனும் ஆகான் இத்தனை,’ என்றபடி.

2. ‘ஆழ்வார்கள் போன வழி யாது?’ என்ன, ‘திருவடி’ என்று தொடங்கி,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, நான்முகன் திருவந். 68.

3. நான்முகன் திருவந். 53.

4. பெரிய திருமொழி, 11. 6 : 7.

5. பெரிய திருமொழி, 7. 4 : 4.

6. ‘ஆபிமுக்ய (அநுகூலமாயிருக்கை) மாத்திரம் செய்யலாமே ஒழிய,
  சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும் அதற்கு விரோதமாக
  உள்ளவற்றை விலக்குதலும் வேண்டினால், பிரபத்தியும் மற்றைச்
  சாதனங்களைப் போன்று செய்தற்கு அரியதாய் இராதோ?’ ‘எளிதானது’
  என்றல் யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பல
  காலங்களாக’ என்று தொடங்கி. ‘இவ்வளவாகிலும்’ என்றது,
  விரோதிகளாயுள்ளனவற்றை விலக்குதலைக் குறித்தபடி.