பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
249

New Page 1

‘இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது. தொழுது அடிப்பாட வல்லார் - பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர். துக்க சீலம் இலர்களே - மோஹித்தவிடத்து வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும், பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது. அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர். சீலம் - தன்மை.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

தீர்ப்பார் இலாதமயல் தீரக் கலந்தமால்
ஓர்ப்பாது மின்றி உடன்பிரிய - நேர்க்க
அறிவழிந்துஉற் றாரும் அறக்கலங்கப் பேர்கேட்டு
அறிவுபெற்றான் மாறன்சீ லம். 

(36)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.