பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
250

ஏழ

ஏழாந்திருவாய்மொழி - ‘சீலமில்லா’

முன்னுரை

    ஈடு : 1‘காற்றாலும் வெயிலாலும் அடிபட்டு உலர்ந்த பயிரானது, மழை பெய்தவாறே பச்சை பெற்றுப் பருவம் செய்வது போன்று, மகிழ்ச்சி அடைந்தாள்,’ என்கிறபடியே, மழை பெய்தால் பயிர் பருவம் செய்வது தன் உணர்த்தியால் அன்றே? அப்படியே, திருநாமப் பிரசங்கத்தால் இவர் உணர்ந்தார். ‘ஆயின், மேல் திருநாமப் பிரசங்கம் உண்டோ?’ எனின், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்று 2அமிருத சஞ்சீவினியான திருநாமப் பிரசங்கம் உண்டாயிற்றே அன்றோ? அந்தத் திருநாமப் பிரசங்கமே குளிர்ந்த உபசாரமாக உணர்த்தி உண்டாயிற்று. 3அதனால் பெற்ற பலம், முன்புத்தை மயக்கத்தையும் இழப்பதற்கு உறுப்பானது இத்தனை. 4மயங்கியிருக்கும் நிலையில் நினைவு இல்லாமையாலே துன்பம் இல்லை; பிறந்த உணர்த்தி பேற்றுக்குக் காரணம் அல்லாமையாலே துன்பத்தை விளைக்க, அதனாலே கூப்பிடுகிறார்.

    5உறக்கத்தில் பசி பொறுக்கலாம்; உறக்கத்தினின்றும் உணர்ந்தால் உண்டு அன்றி நிற்க ஒண்ணாதே அன்றோ? 6உணர்ந்த பின்னர்ப் பொறுக்க ஒண்ணாதபடி

_________________________________________________

1. ‘மேல் திருவாய்மொழி மயக்கமாயிருக்க, இந்தத் திருவாய்மொழியில்
  உணர்த்தி வருகைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘காற்றாலும்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா.
  சுந்.
29 : 6. ‘மகிழ்ச்சியடைந்தாள்’ என்றது, பிராட்டியினை.

2. அமிருத சஞ்சீவினி - உயிர் தரும் ஒரு மூலிகை.

3. ‘பசியன்’ உண்ணுமாறு போன்று, உணர்ச்சி பெற்றால்
  அனுபவிக்குமத்தனையன்றோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘அதனால் பெற்ற பலம்’ என்ற தொடங்கி.

4. ‘ஆயின், உணர்வு பெற்ற நிலையைக்காட்டிலும் மயங்கியிருக்கும் நிலை
  நல்லதோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மயங்கியிருக்கும்’
  என்று தொடங்கி.

5. ‘மயங்கியிருக்கும் நிலை நன்று,’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
  ‘உறக்கத்தில்’ என்று தொடங்கி.

6. ‘அதனாலே கூப்பிடுகிறார்’ என்றதனை விரித்து அருளிச்செய்கிறார்,
  ‘உணர்ந்த பின்னர்’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற
  ‘ஞாலமுண்டாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆபத்துக்கு உதவும்
  தன்மையன்’ என்கிறார். ‘ஞானமூர்த்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘ஆபத்தின் காரணத்தை அறிந்து’ என்கிறார். ‘நாராயணா’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி, ‘சம்பந்தத்தையுடையவனாவது’ என்கிறார். ‘கோலமேனி’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வடிவழகையுடையவனாவது’ என்கிறார்.
  ‘ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
  ‘தகுதியான ஆற்றலையுடையவனாவது’ என்கிறார். ‘அடலாழியானே’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான சாதனங்களையுடையவனாவது’
  என்கிறார். ‘வையங்கொண்ட வாமனாவோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘வரையாதே’ என்கிறார். ‘வள்ளலேயோ! வாமனாவோ! என்பனவற்றைத்
  திருவுள்ளம் பற்றிக் ‘கூப்பிடுகிறார்’ என்றார்.