பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
251

தனக

தனக்குப் பிறந்த பயனில் துன்பத்தை நினைத்து, அவன் ஆபத்துக்கு உதவும் தன்மையனாய் இருக்கிறபடியையும், ஆபத்தின் காரணத்தை அறிந்து அதனைப் போக்குவதில் வல்லன் என்பதனையும் நினைத்து, ஆபத்துக்கு உதவுகைக்குத் தகுதியான சம்பந்தத்தையுடையவனாவது, பிரிந்தால் பொறுக்க ஒண்ணாதபடியான வடிவழகையுடையவனாவது, ஆபத்துகளிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையவனாவது, அதற்குத் தகுதியான சாதனங்களையுடையவனாவது, வரையாதே, எல்லாரையும் ஒருசேரப் பாதுகாக்க வல்லவனாவது, இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே, கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.

    1‘ஓ கௌசல்யே! ஓ சுமித்திரே! ஓ ராமா! ஓ லக்ஷ்மணா!’
என்றாற்போலேயும், ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த
ஆற்றாமையாலே ‘பிரியேதி புத்ரேதிச ராக வேதிச’ என்று
கூப்பிட்டாற்போலேயும் இவரும் கூப்பிடுகிறார்.

    ‘ததாபி சூதேந’ என்ற சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு :- ‘ஸ்ரீ கௌசல்யையார்

_________________________________________________

1. பிரிந்து ஆற்றாமையாலே கூப்பிடுவதற்கு இரண்டு திருஷ்டாந்தம்
  காட்டுகிறார். ‘ஓ கௌசல்யே!’ என்று தொடங்கி. முன்னையது, பெருமாளைப்
  பிரிந்த பிராட்டி கூப்பிட்டது. இது, ஸ்ரீராமா. சுந். 28. 8. பின்னையது,
  பெருமாளைப் பிரிந்த ஸ்ரீகௌசல்யையார் கூப்பிட்டது. இது, ஸ்ரீராமா.
  அயோத்.