இ
இருந்துகொண்டு காலமெல்லாம்
கையைத் தலையிலே குவித்துக்கொண்டு அழைத்தால், அழகிய உன் திருமேனியைக் காணும்படி
வருகின்றாய் இல்லை; நீ இருக்குமிடத்திற்குக் கூவிக்கொள்ளுகின்றாயும் இல்லை; ஆதலால், யான்
நல்லொழுக்கம் இல்லாத சிறியேன் ஆயினும் என்னால் செய்யப்பட்ட பாவங்கள் மிகமிகப் பெரியனவாய்
இருக்கின்றன,’ என்கிறார்.
வி-கு :
சீலம் - ஒழுக்கம். ஓகாரம் - துக்கத்தின் மிகுதிப் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல்.
பூசலிடல் - அழைத்தல். பூசல் - ஒலி. ‘வாராய், கொள்ளாய்’ என்பன, எதிர்மறை முற்றுகள்.
‘கூவியும் கொள்ளாய்; ஆதலால், செய்வினை, ஓ பெரிது!’ எனக் கூட்டுக.
இத்திருவாய்மொழி,
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு :
முதற்பாட்டு. 1‘நெடுங்காலம் கூப்பிடச்செய்தேயும், அங்கீகரியாதபடியாக நான் செய்த
பாவங்களின் மிகுதி இருக்கிறபடி என்னே!’ என்கிறார்.
சீலம் இல்லாத -
சீலம் - நன்மை, அதாவது, நல்லொழுக்கம். ‘நல்லொழுக்கத்தைச் சீலம் என்னக்கடவதன்றோ? இப்போது
நன்மை இல்லாவிட்டால், மேல் ஒரு நன்மையை உண்டாக்கிக்கொள்ளுகைக்கு ஓர் இடமும் இல்லைகண்டீர்,’
என்கிறார் மேல்: சிறியனேலும் - 2ஆத்துமா அணுவாய், ஞானம் எங்கும் பரந்ததாய்
அன்றோ இருப்பது? ஆற்றாமையாலே ஞான ஒளி அடங்கி, ஆத்துமாவின் உளதாம் தன்மை ஒன்றே இப்பொழுது
இருப்பது ஆயிற்றுக்காணும். 3இப்போதும் ஒரு நன்மை இன்றிக்கே, மேலும் ஒரு நன்மையை
ஈட்டிக்கொள்ளுவதற்கு இடம் இல்லாதபடி சிறியனாய் இருந்தேனேயாகிலும். செய்வினை ஓ
_________________________________________________
1. ‘காலந்தோறும் யான்
இருந்து கைதலை பூசலிட்டால், கூவியும் கொள்ளாய்;
செய்வினையோ பெரிதால்,’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘‘ஆத்துமா அணு அளவினது,’
என்பது எல்லார்க்கும் ஒவ்வாதோ? ‘சிறியன்’
என்றதனால் ‘இவருக்கு வாசி யாது?’ என்ன,
‘இங்குச் ‘சிறியன்’ என்கிறது,
அணுத்துவமன்று; ஞான சூக்ஷ்மத்தை,’ என்கிறார், ‘ஆத்துமா’ என்று
தொடங்கி.
என்றது, ‘அல்லாதார்க்கு ஆத்துமா அணுவாகிலும் ஞான
வைபவமாகிலும் உண்டே? அதுவும் எனக்கு இல்லை,’
என்கிறார் என்றபடி.
இதனால், சொரூப சங்கோசம் சொல்லுகிறதன்று; ஞான சங்கோசத்தை
நோக்கிச்
‘சிறியன்’ என்கிறார் என்றபடி.
3. ‘சிறியன்’
என்பதோடு, ‘சீலமில்லா’ என்றதனையும் கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘இப்போதும்’ என்று
தொடங்கி.
|