பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
269

ஒப

ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே!’ என்கிற இவ்வாணியை இட்டுப் பார்த்தவாறே, ‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’ என்றதுவும் மழுங்கிக் காட்டிற்று ஆதலின், ‘ஆணிப்பொன்மேனி’ என்னாது, ‘ஆணிச்செம்பொன் மேனி’ என்கிறார். 1நாவாகிற உரைகல்லிலே உரைத்து, நெஞ்சாகிற மெழுகிலே இட்டுப் பார்த்தால், அது தள்ளுண்ணுமே அன்றோ? 2இவர்தாம் கண் ஆணியாக அன்றோ காண்பது? 3‘மாற்று அற்ற பொன் போலே இருக்கும் திருமேனியில் அழகினைக் காட்டி என்னை உனக்கே உரியவன் ஆகும்படி செய்தவனே!’ என்பார், ‘செம்பொன் மேனி எந்தாய்!’ என்கிறார். 4‘பொன் ஆனாய்’ என்கிற தன்னைக் காட்டிக்காணும் இவரை அடிமை கொண்டது.

    எப்போதும் ஒரே தன்மையாய் இருக்கும் அவன் வடிவிலே ஆழ்வாரைக் கண்டால் பிறக்கும் விகாரம் சொல்லுகிறது மேல் : தாமரைக் கண் பிறழ - ‘கடல் கலங்கினாற்போலே, ஆழ்வாரைக் கண்ட காட்சியிலே திருக்கண்கள்

_____________________________________________________

1. ‘ஆணிப் பொன்னாகில் உரைக்கிறது எதிலே?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நாவாகிற உரைகல்லிலே’ என்று தொடங்கி. இங்கு
  ‘என்னாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்’ என்ற பெரியாழ்வார்
  திருமொழி
அநுசந்தேயம்.

2. ‘ஒரு மெழுகும் உரைகல்லும் வேணுமோ? ஆற்றலையுடையவன் கண்ணாலே
  பார்த்து ‘இத்தனை’ என்று சொல்லிவிடானோ? அப்படியே, இவரும், மயர்வற
  மதிநலம் அருளப் பெற்றவராகையாலே பகவானுடைய திருவருளாலே
  அடைந்த ஞானமே ஆணியாக ‘இது உபமானம் அன்று’ என்று கண்டார்
  என்கிறார், ‘இவர்தாம்’ என்று தொடங்கி. ‘கண்ணாணி’ என்பது கருவிழிக்குப்
  பெயர்; ‘கருவிழியாலேயன்றோ காண்பது?’ என்றபடி. ‘கண்ணே ஆணியாக’
  என்பது வேறும் ஒரு பொருள். கண் - ஞானம்.

3. ‘செம்பொன் மேனி எந்தாய்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
  மாற்று அற்ற’ என்று தொடங்கி.

4. இது, திருநெடுந்தாண்டகம், 10.