|
New Page 1
பொ-ரை :
‘வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த அம்மானே! நான் உன்னை நெஞ்சாலே கண்டுகொண்டு
அறிந்து அறிந்து தெளிந்து தெளிந்து யான் என் உயிரினுள்ளே நிறைந்திருக்கின்ற ஞானமே திருமேனியாகவுடைய
உன்னை, ஐயம் திரிபுகள் அறும்படி வைத்துப் பிறப்பதும் சாவதுமாய் நிலைபெற்றுத் தடுமாறுகின்ற அறிவின்மை
தீர்ந்துவிட்டேன்,’ என்கிறார்.
வி-கு :
‘கண்ணி அம்மா! நிறைந்த ஞான மூர்த்தியாயை உன்னை நான் கண்டுகொண்டு அறிந்து தேறி அறிந்து தேறி
யான் எனதாவியுள்ளே நின்மலமாக வைத்து இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்,’ எனக் கூட்டுக. நின்மலம்
- மலம் அறும்படி. தீர்ந்தொழிந்தேன் - ஒரு சொல்.
ஈடு :
ஏழாம் பாட்டு, 1‘நீர் நம்மைப் போர இன்னாதாகாநின்றீர்; உமக்கு ஒன்றும் உதவிற்றிலேமோ?
நாம் ஒன்றும் உதவிற்றிலோம் என்றேயோ நீர் நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சிறிது செய்தமை
உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.
அறிந்து தேறி அறிந்து
தேறி - முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு
உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, 2‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார்,
அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு
தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்
இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? 3இவையெல்லாம் மானச
அனுபவங்களே அன்றோ?
_____________________________________________________
1. இத்திருவாய்மொழியிலே முன்னும் பின்னும் விஸ்லேஷமாயிருக்க,
இத்திருப்பாசுரம் பிரீதியாகச் சொல்லுமது பிரகரணத்திற்கு முரண்
ஆகையாலே, பிரகரணத்திற்குச்
சேர விருப்பம் முற்றுப் பெறாத தன்மையாக
அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இந்த அமிசத்தைப் பெற்றேன்,’
என்று.
என்றது, ‘மயர்வற மதிநலம் அருள, அதனாலே, இறப்பது பிறப்பதான அறிவு
கேடு தவிரப் பெற்றேன்,’
என்றபடி.
2. ‘வணங்கத் தக்கவன்’
என்றது, ‘வீடுமின் முற்றவும்’ என்ற
திருவாய்மொழியைத் திருவுள்ளம் பற்றி - ‘பத்துடையடியவர்’
என்ற
திருவாய்மொழியைக் கடாக்ஷித்து ‘சுலபன்’ என்கிறார். ‘குற்றங்களைப்
பொறுப்பவன்’ என்றது,
‘அஞ்சிறைய’ என்ற திருவாய்மொழியைத்
திருவுள்ளம் பற்றி.
3. ‘இப்படித்
திருவாய்மொழிதோறும் அறிவும் தெளிவுமாய்ச் சென்றால்
அனுபவம் உண்டேயன்றோ? அங்ஙனமிருக்கக்
கூப்பிடுகிறது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவையெல்லாம்’ என்று தொடங்கி.
|