|
1அன
1அன்றிக்கே,
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே, மிக்க இறைநிலை, 2மனன் உணர்வு அளவு இலன்,
பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன், உணர் முழுநலம்,
இனன்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
3‘அது நமது விதி வகையே,’ 4‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
ஆகும் நீள்கடல் வண்ணன்’ என்கிறபடியே, அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய்
இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்; உயிர்நிலை, 5‘சென்று சென்று
பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம்
கடந்திருக்கும்’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம், 6‘சிறுமாமனிசராய்
என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றும்,
7‘தம்மடியார் அடியோங்களே’ என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய்
இருக்கும்’ என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்; தக்க நெறியின் சொரூபம், 8‘நாகணைமிசை
நம்பிரான் சரணே சரண் நமக்கு’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக் கொள்ளப் பொறாதது என்று
அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்; பல சொரூபம், 9‘ஒழிவில் காலமெல்லாம்
உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய
_____________________________________________________
1. இனி, ‘அறிந்து அறிந்து
தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
என்றது, ‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப்
பரம்பொருளின் யாதாத்மியத்தையறிந்து தேறி’ என்றபடி. இப்படியே, மற்றை
நாலுக்கும் கண்டுகொள்க.
யாதாத்மியம் - அதனுடைய முடிவின் எல்லை;
அதனுடைய உண்மை நிலை.
2. திருவாய்.
1. 1 : 2.
3. திருவாய்.
10. 6 : 1.
4. திருவாய். 3. 6 : 9.
5. திருவாய்.
8. 8 : 5.
6. திருவாய். 8. 10 : 3.
7. திருவாய். 3. 7 : 10.
8. திருவாய். 5. 10 : 11.
9. திருவாய். 3. 3 : 1.
|