பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
278

ய

யாதாத்மியம், 1‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்; விரோதி சொரூபம், 2‘யானே என்றனதே என்று இருக்கை’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம், ‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

    யான் - இப்படி நீ அறிவிக்க அறிந்த யான். எனது ஆவியுள்ளே - எனது மனத்தினுள்ளே. நிறைந்த ஞான மூர்த்தியாயை - நிறைந்த ஞானமே உருவமான உன்னை. என்றது, ‘பெற்ற அளவினைக் கொண்டு மனம் நிறைவு பெற்றவனாக ஒண்ணாதபடியான வேறுபட்ட சிறப்பினையுடைய உன்னை’ என்றபடி. நின்மலமாக வைத்து - குற்றம் அறும்படியாக நினைத்து. பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் - சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவு கேடு தவிரப் பெற்றேன்.

    என்றது, ‘அறிவு பிறந்த பின்பு, ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று விரும்பிய அது பெற்றேன்’

_____________________________________________________

1. திருவாய். 10. 3 : 9.

2. திருவாய். 2. 9 : 9.

      ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து
  இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்; பரம்பொருளின்
  யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
  ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள்
  தொடக்கமானவை என்று அறிதல்; ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை
  அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
  உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச்
  சாதனமாக இருப்பவன் என்று அறிதல்; உபாயத்தின் யாதாத்மியத்தை
  அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே
 
சாதனமாக இருப்பவன் என்று அறிதல்; பலத்தின் சொரூபத்தை அறிதலாவது,
  கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்; பலத்தின் யாதாத்மியத்தை
  அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே
  செய்தல் என்று அறிதல்; விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார
  மமகாரங்கள் என்று அறிதல்; விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது,
  கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.