பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
283

வ

    வி-கு : ‘வல்வினையேன் சக்கரத்து அண்ணலைக் காணவேண்டுமென்று அயர்ப்பாய்த் தடவுகின்றேன்; எங்குக் காண்பன்?’ எனக் கூட்டுக. ‘காதல் கூரத் தடவுகின்றேன்’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘எம்பெருமானைக் காண்கைக்குத் தகுதியான கர்மயோகம் முதலான உபாயங்களுள் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற நான் ‘காண வேண்டும்’ என்று ஆசைப்பட்டால், காண்கைக்கு வழி உண்டோ?’ என்கிறார்.

    இடகிலேன் - வருந்துகிற உயிர்களைக் கண்டால், ‘ஐயோ!’ என்று இரங்கிச் சில இடில், அது சர்வேசுவரன் திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பே அன்றோ? அங்ஙனம் ஒன்றும் செய்யப் பெற்றிலேன். ஒன்று அட்டகில்லேன் - கையில் பொருளை அவிழ்த்து இடாவிட்டால், உடம்பு நோவத் தண்ணீர் சுமந்து வார்க்கலாமே அன்றோ? அதுவும் செய்திலேன். ஐம்புலன் வெல்லகில்லேன் - ‘பிறர்க்கு ஒன்று வேண்டும்’ என்று இராவிட்டால், ‘எனக்கு’ என்னுமதுதான் தவிரப் பெற்றேனோ?’ என்கிறார்; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களிலே 2பட்டிபோகாதபடி வென்றிலேன். கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன் - சாஸ்திரங்களில் சொல்லுகிறபடியே, அடைத்த காலங்களிலே மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு தேவர் திருவடிகளிலே சிறந்த ஆராதனத்தைச் செய்தேன் இலன். ‘ஆயின், 3இவர் சமாராதனம் செய்து அறியாரோ?’ என்னில், நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச்

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘இடகிலேன் ஒன்று அட்டகிலேன்’ என்கையாலே கர்மயோகம் இன்மையும்,
  ‘ஐம்புலன் வெல்லகில்லேன்’ என்கையாலே ஞானயோகம் இன்மையும்,
  இரண்டாமடியாலே பத்தியோகம் இன்மையும் சொல்லுகிறது.

2. பட்டி போதல் - பயிர் மேய்தல்; அல்லது, கண்டபடி திரிதல்.

3. மேலே, ‘எண்திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘இவர் சமாராதனம் செய்து அறியாரோ? என்னில்,’ என்கிறார். ‘நூல்
  பிடித்தாற்போலே’ என்றது, சிலேடை : நூல் - சாஸ்திரமும், முறையும்.
  ‘முறை தப்பாமல்’ என்றபடி. தேக யாத்திரைக்கு - கைங்கரியத்திற்கு.
  அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே
  செய்துகொடு நிற்பர். இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமது
  உண்டு’ என்றபடி.