|
New Page 1
சொல்லுகிற சமாராதனத்தில்
இவர்க்குச் சம்பந்தம் இல்லை; தேக யாத்திரைக்கு உடலாகச் செய்யுமது உண்டு.
1‘இவை
உண்டாயினவானால் பத்தி சொரூபத்திலே அடக்கிவிடலாம், அதுவும் இல்லை,’ என்கிறார்.
‘ஆயின், கர்மயோகம் முதலானவற்றை விலக்குகிறதோ?’ எனின், அவற்றினுடைய சொரூபத்தை விலக்க
வந்தது அன்று; அவற்றினுடைய உபாயத் தன்மையை விலக்குகிறது.
மடம் வல் நெஞ்சம்
- மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்துகொண்டு
நிற்கை. வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்குநின்றும் மீட்க அரிதாய் இருக்கை. காதல் கூர -
இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் - ‘அன்பிற்குத் தகுதியாகக்
காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்; 2இதனை
அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;
என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.
அயர்ப்பாய் - அறிவு
கேட்டை உடையேனாய். தடவுகின்றேன் - 3‘கௌசல்யையே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை,’
என்கிறபடியே, முன்னே வந்து நின்றாலும் காண மாட்டாதபடி தடவாநின்றேன். எங்குக் காண்பன் -
4ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்கக் கூப்பிடுகிற நான், எங்கே காணக் கூப்பிடுகின்றேன்?
சக்கரத்து அண்ணலையே - கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை.
_____________________________________________________
1. ‘இவையுண்டாயினவானால்’
என்றது, ‘பூப்பறித்து ஏத்துதல் முதலாய
இவையுண்டாயின ஆனால்’ என்றபடி.
2. ‘கூர்’ என்றதனை நோக்கி,
‘இதனை அகஞ்சுரிப்படுத்தினேனல்லேன்’
என்கிறார். அகஞ்சுரிப்படுத்தினேன்
அல்லேன் - குறைக்க வல்லேனல்லேன்.
‘கூர்’ என்பது, மிகுதியைக் காட்டுவதோர் உரிச்சொல்.
‘வல்வினையேன்’
என்றதனை நோக்கி அருளிச்செய்கிறார், ‘ஆசை சிறிதுடையார்க்கு’ என்று
தொடங்கி.
3. ஸ்ரீராமா.
அயோத். 42 : 34. இது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்த காரணத்தால்
கலக்கமடைந்த சக்கரவர்த்தி
கூறியது.
4. முதல்
இரண்டு வரிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘ஒரு கைம்முதல்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
|