New Page 1
குழுவு மாடம் தென்குருகூர்
- 1‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி
குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி. இதனை ‘வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக
இருக்கிறார்கள்’ என்பது போன்று கொள்க. மாறன் - சமுசாரத்தை மாற்றினவர். சடகோபன் - பகவானிடத்தில்
விருப்பமில்லாதவர்கட்குப் பகைவர். சொல் வழு இலாத - பகவானைப் பிரிந்த பிரிவாலே கூப்பிடுகிற
இந்நன்மையில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன. ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப்பாடி ஆட வல்லார் -
2ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய
நின்றாகிலும் இதனைக்கற்க வல்லவர்கள். வைகுந்தம் ஏறுவரே - காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக்
கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர். குழுவு மாடம் - நெருங்கின
மாடம். தென்குருகூர் - ஆதலால், ஆழகிய திருநகரி.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
சீலமிகு கண்ணன் திருநாமத்
தால்உணர்ந்து
மேலவன்றன் மேனிகண்டு
மேவுதற்குச் - சால
வருந்திஇர வும்பகலும்
மாறாமற் கூப்பிட்டு
இருந்தனனே தென்குருகூர்
ஏறு.
(37)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. ‘ஆழ்வார் ஆற்றாமையாலே
துன்ப மிகுந்தவராய் இருக்க, திருநகரிக்குக்
குளிர்த்தி எங்ஙனே?’ என்ன, அதற்கு விடையும்
அருளிச்செய்து,
மேற்கோளும் காட்டுகிறார், ‘ஆழ்வார்க்கு’ என்று தொடங்கி. ‘தென்’ என்பது
அழகாய், அதனால், குளிர்ச்சியைச் சொல்லுகிறது. அதற்குப் பிரமாணம்
‘வீட்டில்’ என்று தொடங்குவது,
இது, ஸ்ரீராமா. யுத். 127 : 5. ஸ்ரீ
பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக்
கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும்
சௌக்கியமாக
இருக்கிறார்கள்’ என்று பரத்துவாச முனிவர் ஸ்ரீ ராமபிரானைப்
பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.
2. ‘தழுவி நின்ற காதல்’ என்றாற்போலே, ‘தழுவி நின்று பாட வல்லார்’
என்னாதது என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘ஆழ்வாருடைய’ என்று தொடங்கி. ‘தழுவுதல்’ என்றது, பரிசித்தலாய்,
‘ஆழ்வாருடைய பாவ விருத்தியிலே அந்யவத்தை உடையராய்க்கொண்டு’
என்றபடி.
|